‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.

இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.

வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜய்ஸ்ரீ.

தமிழகத்தில் இல்லாத ஒன்றை இயக்குனர் காட்சிகளாக வைத்திருப்பது நெட்டிசன் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நரபலி கொடுத்த மனித உடலை கறி போல வெட்டி துண்டு துண்டாக சாப்பிட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர் 2 தமிழக பெண்கள்….

சடலங்களை 56 துண்டுகளாக வெட்டி மாமிசம் சாப்பிட்டதாக கேரள தம்பதியினர் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படத்தின் காட்சிகள் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Powder movie human meat controversy now happened at Kerala

Here’s #Powder official trailer

https://www.filmistreet.com/video/powder-official-trailer/

புதிய பெற்றோர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கார்த்தியின் அன்பின் அடையாளம்!

புதிய பெற்றோர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கார்த்தியின் அன்பின் அடையாளம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சமீபத்தில் பெற்றோர்களாகி இரட்டை ஆண் குழந்தைகளை தங்கள் வாழ்க்கையில் வரவேற்றனர்.

இப்போது, ​​​​இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான நடிகர் கார்த்தி, நயன் மற்றும் விக்கியை மனதார வாழ்த்தியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ நடிகர் கார்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு மலர் கொத்து அனுப்பினார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் OTT ரிலீஸ் தேதி!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் OTT ரிலீஸ் தேதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் காம்போ சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணைந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 அன்று திரைக்கு வந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அதன் பட்ஜெட்டை விட இருமடங்காக வசூலித்ததால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே சமீபத்திய ஹாட் அப்டேட் என்னவென்றால், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘வென்று தணிந்தது காடு’ ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 வயதான நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தார், இது இந்தியாவில் சட்டவிரோதமானது என்று சிலர் சர்ச்சையை எழுப்பினர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “அன்பான பெற்றோருக்கு பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது எது, எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கவும் கொடுக்கவும் முடியும்.

ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்தால் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்

கதிரவன் கலக்கும் ‘சீன் நம்பர் 62′.: தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல்

கதிரவன் கலக்கும் ‘சீன் நம்பர் 62′.: தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆதாம்’* திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான *‘சீன் நம்பர் 62’*-ஐ நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதல் பாடலான *’என் சேவல்’* சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஐயப்பனும் கோஷியும்’ மலையாளம் படத்தில் இடம்பெற்ற “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு” பாடலை பாடிய, *68வது தேசிய விருது வென்ற நஞ்சியம்மா* பாடிய பாடல் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

பாடலை கேட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல வெற்றி பாடல்களை பாடியுள்ள வேல்முருகன், நஞ்சியம்மாவுடன் இனைந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலின் வரிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. *சிவபிரகாசத்தின்* வரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி* முழு பாடலையும் எழுதியுள்ளார்.

இப்பாடலுக்கு *ஜிகேவி* மிகவும் பொருத்தமான முறையில் இசை அமைத்துள்ளார். பாடலின் காட்சியமைப்பு அனைத்தும் புதுமையாக உள்ளது என்று பாடலை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

*கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன்* மற்றும் *ராகந்த்* ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புது முகமாக இருந்தாலும் அனைவரும் ரசிகர்களை கவரும் படியாக உள்ளனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் *’சீன் நம்பர் 62’* படமாக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

National award winner tribal singer Nanjiammas first Tamil song from Scene Number 62

Link:
https://youtu.be/MEklu2ttqcU

#SceneNumber62
#Nanjamma #Velmurugan
#AdamZamar #ActorKathiravan
#GKV

ஒரே நேரத்தில் ரஜினி & தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

ஒரே நேரத்தில் ரஜினி & தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள ‘வாத்தி (SIR)’ என்ற படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இந்தப் படம் 1920களில் நடக்கும் கால கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

மேலும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலை எதிர்ப்பார்க்கலாம்.

‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ்குமார்

Sivarajkumar will be part of Rajini and Dhanush movies

More Articles
Follows