மக்களே வெறுத்த பர்த்டே பார்ட்டியில் நிகில் முருகன்.; வலிமை-யுடன் பவுடரை இணைத்த விஜய்ஸ்ரீ

மக்களே வெறுத்த பர்த்டே பார்ட்டியில் நிகில் முருகன்.; வலிமை-யுடன் பவுடரை இணைத்த விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவர் விஜய்ஸ்ரீ.

இவர் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.

இதனிடையில் வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பவுடர் படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.

கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ‘வலிமை’ படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது.

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது.

திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை (கிளிம்ப்ஸ்) – லேயண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – பிரஹத் முனியசாமி (கிளிம்ப்ஸ்) உதவி ஒளிப்பதிவாளர்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ

Powder glimpse released with Valimai

வலி கொடுக்கும் ‘வலிமை’..; அஜித் ரசிகர்களுக்கு ஆபத்து..; ச்சே. இதெல்லாம் நல்லாவா இருக்கு.?

வலி கொடுக்கும் ‘வலிமை’..; அஜித் ரசிகர்களுக்கு ஆபத்து..; ச்சே. இதெல்லாம் நல்லாவா இருக்கு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நாளை பிப்ரவரி 24ல் வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

‘வலிமை’ பட ட்ரைலரில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். எனவே எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

‘வலிமை’ அடுத்தவன அழிக்க இல்ல.. அடுத்தவன காப்பாத்த..; உள்ளிட்ட பன்ச் டயலாக்குகள் ட்ரைலரில் இடம் பெற்று இருந்தன.

கடந்த சில தினங்களாக ‘வலிமை’ பட ஸ்டில்கள் & புரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை ரிலீசை முன்னிட்டு தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.

மேலும் தியேட்டர் ஸ்கிரீன் முன் நின்று ரசிகர்கள் நடனம் ஆடுவார்கள். அதனை தடுக்க ஸ்கீரீன் அருகே இருக்கும் மேடையில் ஆணிகளை குத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பிரபலமான தியேட்டரில் இது நடந்துள்ளது.

அந்த போட்டோ இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.

ஸ்கிரீன் அருகே எவரும் ஆட கூடாதுதான்.. அதற்காக இப்படியா செய்வார்கள்.? அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஆபத்து அருகில் உள்ளது. கவனமாக வலிமையை பாருங்கள்.. ஆடினால் வலி உங்களுக்குத்தான்…!

Valimai movie release Danger for Ajith fans

‘கர்ணன்’ இயக்குனர் கட்டிய வீடு..; களை கட்டிய கிரகப்பிரவேசம்.; தாணு உதயநிதி ரஞ்சித் பங்கேற்பு

‘கர்ணன்’ இயக்குனர் கட்டிய வீடு..; களை கட்டிய கிரகப்பிரவேசம்.; தாணு உதயநிதி ரஞ்சித் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்.

இவர் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.

மாரிசெல்வராஜ் அவர்களின் குருநாதர் இயக்குனர் ராம் அவர்களின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு மற்றும் திரையுலகத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லத்திற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Celebrities attend grand function at director Mari Selvaraj’s new home

ஆபாச அரசியல் : ‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என சொல்ல விரும்பல..: கவலையில் கமல் கடிதம்

ஆபாச அரசியல் : ‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என சொல்ல விரும்பல..: கவலையில் கமல் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மட்டும் தேர்தல் கடந்த (பிப்) 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கட்சியே வெற்றி பெற்றது.

தற்போதுள்ள நிலையில் நடிகர்களில் விஜய்காந்த் கமல்ஹாசன் சரத்குமார் ஆகியோரை விட விஜய் முன்னிலையில் உள்ளார்.

இவர்களில் தன் கட்சிக்கு (விஜய் மக்கள் இயக்கம்) ஓட்டு போடுங்கள் என்று ஒருபோதும் விஜய் கேட்டதில்லை..

ஆனாலும் இவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

ஆனால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற உள்ளிட்ட தேர்தலை சந்தித்து வருகிறது.

2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

கமலின் தேர்தல் வியூகங்கள் சரியில்லை எனக் கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அப்போது வெளியேறியது கூட தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தன் தேர்தல் தோல்வி குறித்து கமல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த ம.நீ.ம வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்.

நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்கு சேவையாற்றுங்கள்.

இடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே தங்களது ஓட்டுகளை செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளை கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்த தேர்தலில் பங்கேற்றிருப்பார்கள்.

தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாக சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள்.

வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாக கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.

என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என 4 ஆண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

இவ்வாறு கமல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Maiam will fight against all odds and continue to serve the people forever says Kamal Haasan

அத்தனை புகழும் அமீருக்கே..; 15 வருட பயணத்தை பகிரும் நடிகர் கார்த்தி

அத்தனை புகழும் அமீருக்கே..; 15 வருட பயணத்தை பகிரும் நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’.

இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் செய்த சாதனை, கடுமையாக உழைத்த ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்த வெற்றி.

உலகமெங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்று, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களின் பட்டியலில் கார்த்தியையும் இணைத்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி.

‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார்.

கமர்ஷியல் வெற்றி மட்டுமன்றி இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மேலும், 15 ஆண்டுகளில் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் பாதிக்கும் மேல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்.

அந்தளவுக்குத் தனது திரையுலக வாழ்க்கை பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது வசூல் சாதனை படைக்கும் நடிகராக நிற்கிறார் கார்த்தி.

இன்று ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பலரும் கார்த்திக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கார்த்தியும், தனது 15 ஆண்டுக்கால பயணத்துக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது…

“’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நான் உணர்கிறேன்.

(அந்தப் படத்தில்) என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது.

எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம்.

இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்,” என்றார் கார்த்தி.

Karthi thanks note on completing 15 years in film industry

விஜயகாந்த் வீழ்ச்சி.. கமல் சொல்லியும் கேட்கல.. விஜய் சொல்லாமலே நடக்குதே.!

விஜயகாந்த் வீழ்ச்சி.. கமல் சொல்லியும் கேட்கல.. விஜய் சொல்லாமலே நடக்குதே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மட்டும் தேர்தல் கடந்த (பிப்) 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கட்சியே வெற்றி பெற்றது.

தற்போதுள்ள நிலையில் நடிகர்களில் விஜய்காந்த் கமல்ஹாசன் சரத்குமார் ஆகியோரை விட விஜய் முன்னிலையில் உள்ளார்.

இவர்களில் தன் கட்சிக்கு (விஜய் மக்கள் இயக்கம்) ஓட்டு போடுங்கள் என்று ஒருபோதும் விஜய் கேட்டதில்லை..

ஆனாலும் இவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

நேற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் VMI கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார்.

மேலும் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற உள்ளிட்ட தேர்தலை சந்தித்து வருகிறது.

2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கமலால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

கமலின் தேர்தல் வியூகங்கள் சரியில்லை எனக் கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அப்போது வெளியேறியது கூட தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கூடுதல் தகவல்கள்…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

*பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 7621
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 7596

▪️திமுக 4384
▪️அதிமுக 1206
▪️காங்கிரஸ் 367
▪️பிஜேபி 229
▪️சிபிஐ (எம்) 101
▪️பா ம க 73
▪️அமுமுக 66
▪️வி சி க 51
▪️மதிமுக 34
▪️சிபிஐ 26
▪️தேமுதிக 23
▪️SDPI 16
▪️மனிதநேய மக்கள் கட்சி 13
▪️முஸ்லீம் லீக் 12
▪️நாம் தமிழர் கட்சி 6
▪️புதிய தமிழகம் 3
▪️பகுஜன் சமாஜ் 1
▪️தேசியவாத காங்கிரஸ் 1
▪️கம்னியூஸ்ட் 1
▪️இந்திய ஜனநாயக கட்சி 1
▪️மறுமலர்ச்சி ஜனநாயக கட்சி 1
▪️த ம ம க 1
▪️சுயேட்சை 980

➖➖➖➖➖➖➖➖➖

*நகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 3843
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 3627

▪️திமுக 2253
▪️அதிமுக 606
▪️காங்கிரஸ் 146
▪️பிஜேபி 49
▪️சிபிஐ (எம்) 39
▪️பா ம க 46
▪️அமுமுக 32
▪️வி சி க 24
▪️மதிமுக 34
▪️சிபிஐ 19
▪️தேமுதிக 11
▪️SDPI 4
▪️மனிதநேய மக்கள் கட்சி 4
▪️முஸ்லீம் லீக் 23
▪️நாம் தமிழர் கட்சி 0
▪️புதிய தமிழகம் 1
▪️பகுஜன் சமாஜ் 3
▪️தேசியவாத காங்கிரஸ் 0
▪️கம்னியூஸ்ட் 1
▪️இந்திய ஜனநாயக கட்சி 2
▪️ மனிதநேய ஜனநாயக கட்சி 1
▪️த ம ம க 0
▪️ சமத்துவ மக்கள் கட்சி 1
▪️AIMEM 1
▪️Forward Bloc 1
▪️சுயேட்சை 359

➖➖➖➖➖➖➖➖➖

*மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு*

✳️மொத்த பதவியிடங்கள் 1374
✅முடிவுகள் அறிவிக்கப்பட்டது 970

▪️திமுக 739
▪️அதிமுக 131
▪️காங்கிரஸ் 58
▪️பிஜேபி 13
▪️சிபிஐ (எம்) 19
▪️பா ம க 4
▪️அமுமுக 2
▪️வி சி க 11
▪️மதிமுக 13
▪️சிபிஐ 7
▪️முஸ்லீம் லீக் 3
▪️சுயேட்சை 46

Vijayakanth, Kamal Haasan and Vijay party’s votes percentage in local body election

More Articles
Follows