தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் பி.ஆர்.ஓக்கள்.
இவர்களே தங்களின் பத்திரிக்கை மூலமாக சினிமா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
இந்நிலையில் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தேர்தல் நடப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக சில பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
ஆனால் இம்முறை அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.
64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 58 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர்.
இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…
தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு மற்றும் ஆதம்பாக்கம் ராமதாஸ், நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தலைவராக டைமண்ட் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆறாவது முறையாக தலைவராகி இருக்கிறார்.
மற்றவர்கள் விவரம் இதோ…
- துணைத் தலைவர்கள் – பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர்
- பொதுச் செயலாளர் – திரு. A. ஜான்
- பொருளாளர் – விஜயமுரளி
- இணைச் செயலாளர் – நிகில் முருகன் மற்றும் யுவராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் :-
- வெட்டுவானம் சிவகுமார்
- மேஜர் தாசன்
- அந்தணன்
- பாலன்
- ஆறுமுகம்
- கிளாமர் சத்யா
- சக்திவேல்
- சரவணன்
- ரேகா
வெற்றி வாகை சூடிய அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.