ப்ளீஸ்.. ஒன் டைம்.: ரஜினியுடன் நடிக்க நெல்சனிடம் பிட்டு போடும் ‘பவுடர்’ பட பிரபலம்

ப்ளீஸ்.. ஒன் டைம்.: ரஜினியுடன் நடிக்க நெல்சனிடம் பிட்டு போடும் ‘பவுடர்’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் முக்கியமானவர் நடிகர் வையாபுரி.

இவர் கமல், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

ஆனால் இதுவரை ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பவுடர்’ படத்தில் நாயகி அனித்ராவின் தந்தையாக நடித்துள்ளார்.

இந்த படம் தனக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் ‘பவுடர்’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருந்தார். இந்த படம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்…

“ரஜினியை ஒருமுறை சந்தித்தேன்.. அவர் வாங்க வையாபுரி.. கமல் கூட மட்டும் தான் நடிப்பீர்களா? என என்னிடமே கேட்டார்.

ரஜினியை பொறுத்தவரை அவர் தன் இயக்குனர்களிடம் இவரை இந்த படத்தில் நடிக்க வையுங்கள்… அவரை நடிக்க வைக்க வேண்டாம் என எதையுமே சொல்ல மாட்டார்.

இயக்குனரின் முடிவே என இருப்பார் ரஜினிகாந்த். எனவே அவரிடம் வாய்ப்பு கேட்க முடியாது. இப்போதும் கூட ‘ஜெயிலர்’ படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நெல்சனிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால் எனக்கான கேரக்டர் அந்த படத்தில் இல்லை என்கிறார் நெல்சன்” என்றார் நடிகர் வையாபுரி.

வையாபுரி

Vaiyapuri asking Chance to Act with Rajini

வெங்கட் பிரபுவுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி கிருத்தி ஷெட்டி

வெங்கட் பிரபுவுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி கிருத்தி ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிருத்தி ஷெட்டி.

இவர், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அந்த படத்தை தற்காலிகமாக ‘NC22’ என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர் 7தேதி வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு கிருத்தி ஷெட்டி வாழ்த்து தெரிவித்தது படப்பிடிப்பில் போது உண்மையில் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருப்பதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன்.

உங்களுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது.மேலும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட் பிரபு சார் என்று கிருத்தி ஷெட்டி.

Working with Venkat Prabhu is happy said Krithi Shetty

தனது உடல்நிலை குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட சமந்தா

தனது உடல்நிலை குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யசோதா பட ப்ரமோஷனில் பேசிய சமந்தா “மூன்று மாதங்கள் ஆகிவிட்டன நான் எந்த நேரத்திலும் இறக்க மாட்டேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன். என்னுடையது உயிருக்கு ஆபத்தான நிலை என்று பல கட்டுரைகளைப் பார்த்தேன். அது இல்லை, “என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சாம் தனது உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது என்ற செய்தி அறிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளார்.

அதிக டோஸ் மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கான முடிவில்லா பயணங்கள் சில நாட்களில் தன்னை பிஸியாக வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஷங்கரின் ‘வேள்பாரி’ நாவலின் படத்தின் அப்டேட் கூறினார்..! – கார்த்திக் சுப்புராஜ்..

ஷங்கரின் ‘வேள்பாரி’ நாவலின் படத்தின் அப்டேட் கூறினார்..! – கார்த்திக் சுப்புராஜ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மஹான்’ இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ நாவலை அடிப்படையாகக் கொண்ட படத்தில் ஷங்கருடன் இணைந்து பணிபுரிகிறார் என்பதை உறுதிப்படுத்தினார் கார்த்திக் சுப்புராஜ்.

முன்னதாக, வேள்பாரி நாவலில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்திய அறிக்கையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறுகிறது.

இப்படம் மூன்று பாகங்களாக ரூ.1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளதாக கூறினார் கார்த்திக் சுப்புராஜ்.

Karthik Subbaraj said ‘Velpari’ novel film update

தொழிலதிபரின் உழைப்பை சொல்லும் ‘விஜயானந்த்’ பட பாடல் வெளியானது

தொழிலதிபரின் உழைப்பை சொல்லும் ‘விஜயானந்த்’ பட பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் படம் ‘விஜயானந்த்’.

இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது.

இதில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். ‘ஸ்கெட்ச்’ படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசா சாகுந்தலா…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடல் கோபி சுந்தர் இசையில், பாடலாசிரியர் மதுர கவி எழுத, பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் பாடகி கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடல் வெளியிட்டு விழா பெங்களூரில் உள்ள பிரபலமான ஓரியன் மால் எனப்படும் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொணடு சிறப்பித்தனர்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,…

‘ 1976 ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் இறங்கிய விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி. ஆர்‌ எல் எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார்.

இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம்.

அவரது மகனான டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வருடன், விஜய் சங்கேஸ்வரின் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதையும் விவரித்திருக்கிறோம். கன்னடத்தில் தயாராகி முதன்முதலாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகும் முதல் சுயசரிதை திரைப்படம் என்ற கௌரவத்தையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காளிதாசன் சாகுந்தலா..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். ” என்றார்.

‘பிரின்ஸ்’ கொடுத்த பிஃயர்.: வழுக்கும் ‘வாரிசு’.; வருத்தத்தில் ‘வாத்தி’

‘பிரின்ஸ்’ கொடுத்த பிஃயர்.: வழுக்கும் ‘வாரிசு’.; வருத்தத்தில் ‘வாத்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவில் தமிழ் சினிமாவுக்கு நிகராக தெலுங்கு சினிமாவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.

தெலுங்கில் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அதுபோல தமிழ் சினிமாவில் ஓரிரு தெலுங்கு நடிகர்களுக்கும் மார்க்கெட் உள்ளது.

எனவே ஒரு மொழியில் தயாராகும் படத்தை மற்ற மொழியில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினி, கமல், சூர்யா,விஷால், கார்த்தி உள்ளிட்டோருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் தான் நடிகர்கள் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து அழைப்பு வந்தது.

இதனையடுத்து இவர்கள் மூவரும் தெலுங்கு இயக்குனரின் படங்களில் நடித்து வருகின்றனர்.

அனுதீப் இயக்கிய சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளிக்கு ருலீசாகிவிட்டது.

வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கி அல்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த மூன்று படங்களும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களாக உருவாகி வருகிறது.

தீபாவளிக்கு வெளியான ‘பிரின்ஸ்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததால் தோல்வியை தழுவியுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடல் வெளியானது.

இந்த பாடலும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதில் விஜய் பயன்படுத்திய நடன அசைவுகள் ஏற்கனவே சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் பயன்படுத்தியது.

மேலும் இந்த பாடலும் பழைய பாடலின் மெட்டு போல உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமன் இசையும் போதுமான வரவேற்பை பெறவில்லை.

இதனால் விஜய் ரசிகர்களும் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

தெலுங்கு இயக்குனரின் படங்கள் தமிழ் நடிகர்களுக்கு ஒத்து வரவில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.

இது தனுஷ் ரசிகர்களிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கூடுதல் தகவல்…

தெலுங்கு நடிகர்களை வைத்து தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய பாகுபலி, ஆர் ஆர் ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இங்கு கவனிக்கத்தக்கது.

Telugu director’s films are not suitable for Tamil actors.

More Articles
Follows