பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு விஷால் இணைந்த ‘காடன்’

Prabhu Solomons Kaadan to release on April 2விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த ‘கும்கி’ படத்தை இயக்கினார் பிரபு சாலமன்.

இதில் யானைக்கும், பாகனுக்குமான உறவை மையமாகக் கொண்டு இயக்கியிருந்தார்.

தற்போது அதனை போல் காடன் என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளர்.

இதனை பெரிய பட்ஜெட்டில் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளதாம்.

தமிழில் காடன், தெலுங்கில் ஆரண்யா மற்றும் ஹிந்தியில் ஹாதி என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட் ஆகிய மூன்று மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஸ்ரேயா, சோயா உசேன் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

லைப் ஆப் பை, தோர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த பிராணா ஸ்டுடியோ இந்த படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை. செய்கிறது.

3 இடியட்ஸ், பிகே , பிங்க் படங்களுக்கு இசையமைத்த சாந்தனு மொய்த்ரா இசையமைக்க ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார்.

வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர்.

Prabhu Solomons Kaadan to release on April 2

Overall Rating : Not available

Latest Post