நல்ல சம்பளம்.. நடிக்க சான்ஸ்.. விருப்பமிருக்கா.? விஷ்ணு விஷால் பெயரில் மோசடி

நல்ல சம்பளம்.. நடிக்க சான்ஸ்.. விருப்பமிருக்கா.? விஷ்ணு விஷால் பெயரில் மோசடி

actor vishnuவிஷ்ணு விஷால் ‘எஃப்ஐஆர்’ & ‘காடன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்..

(ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்திருந்தார்.) அதில் மதன் என்பவர் ஒரு மேசேஜ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு தமிழ் திரைப்படம் உருவாகுகிறது..

புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார்.

நல்ல ஊதியம் கிடைக்கும்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

நீங்கள் விருப்பப்பட்டால் மேற்கொண்டு தகவல்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விஷ்ணு விஷால் கூறியதாவது…

“தன் பெயரை தவறான காரியங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

அந்த நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற செய்திகளை பரப்புவர்களுக்கு தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

விரைவில் இது குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்படும்.

தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் தற்போது தான் நடிக்கவில்லை.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்..

Actor Vishnu Vishal alerts actresses on fraud misusing his name

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *