விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.

விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ameer slams BJP and supports Actor Vijayசென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் நடிகரும் இயக்குனருமான அமீர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தஞ்சை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி எந்றார்.

இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமீர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் பிரச்னை இருக்க ரஜினி-விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி

விஜய் வீட்டில் நடந்த வருமான வரிசோதனையை விமர்சனம் செய்யக்கூடாது, காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அச்சுறுத்தலாகவும், இருக்கக்கூடாது.

தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம்.

எனவே வருமான வரி சோதனைய நடந்திருக்கலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களால் விஜய் வளர்ச்சிதான் அடைவார், அவருக்கு பின்னடைவாக இருக்காது.

டெல்லியில் மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் மாணவர்கள் போராட்டம் பற்றி ரஜினி பேசக்கூடாது.

ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் எனவும் அமீர் பேசினார்.

Ameer slams BJP and supports Actor Vijay

இணையத்தை தெறிக்க விட்ட விஜய்; தளபதியின் MASS-TER செல்ஃபி

இணையத்தை தெறிக்க விட்ட விஜய்; தளபதியின் MASS-TER செல்ஃபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijays Masster selfie goes viralநடிகர் விஜய் நெய்வேலி பகுதியில் நடைபெற்று வரும் ’மாஸ்டர்’ சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

பெரும்பாலும் இவர் சூட்டிங்கில் சமய இடைவெளியில் ரசிகர்களை சந்திப்பதுண்டு.

இப்போதும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால் இந்த முறை இது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்

வருமான வரித்துறை சோதனை… காரில் போகும்போது முகத்தை மறைத்த விஜய், தற்போது நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் என திரையுலகை உலுக்கி வருகிறது.

இதனால் நெய்வேலியில் திரளான ரசிகர்கள் விஜய்யை காண தினம் தோறும் அங்கே வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தான் எடுத்த செல்ஃபியை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அதை அனைவரும் பகிர்ந்து MASS-TER தளபதி செல்ஃபி என டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

பல பிரபலங்களும் விஜய்யை வாழ்த்தி வருகின்றனர்.

Actor Vijays Masster selfie goes viral

ரஜினி அங்கிள் முதல் அத்தான் வரை…; மீனாவின் மலரும் நினைவுகள்

ரஜினி அங்கிள் முதல் அத்தான் வரை…; மீனாவின் மலரும் நினைவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meena reveals how Rajini was first Uncle and then Aththaanகுழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை மீனா.

இதில் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினியை அங்கிள் அங்கிள் என்று செல்லமாக அழைத்தவர் பின்னர் ரஜினிக்கே நாயகியாக 3 படங்களில் நடித்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நாயகியாக திகழ்ந்தார்.

இந்த நிலையில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மீனா.

ச்சே.. மீனாவா இப்படி.? 18+ என்ற பெயரில் கரோலின் காமாட்சி அட்டகாசம்

இதில் ராதிகா – மீனா இருவரும் தங்களது திரைத்துறை நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

தனது குழந்தைப் பருவத்தை மற்ற குழந்தைகளைப் போல் கழிக்காமல் தவற விட்டுவிட்டதாகவும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மீனா தெரிவித்தார்.

தற்போது ரஜினிகாந்துடன் அவரின் 168 படத்தில் நடிக்கும் அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மீனா கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி நாளை பிப்ரவரி 11-ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் கலர்ஸ் டிவி தெரிவித்துள்ளது.

Meena reveals how Rajini was first Uncle and then Aththaan

ஆஸ்கர் விருதுகள் 2020 : பரிசை வென்றவர்கள் முழு விவரம் இதோ…

ஆஸ்கர் விருதுகள் 2020 : பரிசை வென்றவர்கள் முழு விவரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

92nd Oscar Awards 2020 Winner Full List is hereஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

உலக அளவில் நிறைய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வந்தாலும் இந்த ஆஸ்கர் அவார்ட் பெரிய கவுரமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் 2வது முறையாக தொகுப்பாளர் இல்லாமல் நடந்து வரும் ஆஸ்கர் விருது விழா, JANELLE MONAE மற்றும் BILLY PORTER-ன் பாடலுடன் தொடங்கியது.

முதலில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதை ONCE UPON A TIME IN HOLLYWOOD படத்தில் நடித்ததற்கான பிராட் பிட் தட்டிச் சென்றார். பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வரும் பிராட் பிட் நடிகராக வென்ற முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு

மற்ற கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – பாராசைட்

சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)

சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி

சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4

சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த ஒப்பனை – கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)

சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)

சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)

சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)

ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)

ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)

தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

92nd Oscar Awards 2020 Winner Full List is here

கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி தரும் ஜாக்கிசான்

கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி தரும் ஜாக்கிசான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jackie chan announces 1 crore for Carona Virus Medicineசீனா நாட்டில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இந்த உலகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் அச்சத்தில் இருந்தாலும் சீன மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.

உலகின் சிறந்த மருத்துவர்களை இந்த வைரஸை கண்டு அச்சத்தில் உள்ளனர்.

‘எலும்புகள் உடைந்தபிறகு ஆஸ்கர் விருது…’ ஜாக்கிசான் பெருமிதம்

ஆராய்ச்சிகள் செய்து இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தான் தயாராக இருப்பதாக உலகப்புகழ் பெற்ற ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

அவரின் பதிவில்… அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்துதான் இந்த வைரஸை வெற்றிகொள்ள முடியும்.

பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

Jackie chan announces 1 crore for Carona Virus Medicine

விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்

விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay gets Income Tax Dept notice He seeks more timeமாஸ்டர் பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டிருந்த விஜய்யை அழைத்து சென்று அவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

மேலும் பைனான்சியர் அன்பு செழியன், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு தினங்களாக சோதனை செய்தனர்.

இதில் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது.

விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.

இந்த நிலையில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் சூட்டிங்கில் விஜய் கலந்துக் கொண்டிருப்பதால் அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay gets Income Tax Dept notice He seeks more time

More Articles
Follows