தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று.
சூர்யாவே தயாரித்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடிக்க ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியிருப்பதால் விமான பற்றிய நிறைய காட்சிகள் நிறைய உள்ளதாம்.
வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
எனவே இசை விழாவையும் சென்னை விமான நிலையத்தில் நடத்த பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Soorarai Pottru audio launch will happend in Chennai Air Port