‘அசுரன்’ நாயகி மஞ்சு வாரியாருடன் இணைந்த பிரபுதேவா

‘அசுரன்’ நாயகி மஞ்சு வாரியாருடன் இணைந்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ எனும் படத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.

இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம்பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆயிஷா

Prabhu Deva manju warrier joining Ayisha movie

விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.

அக்டோபர் 7 திரைக்கு வரவிருக்கும் தனது ஹிந்தி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் அவர் தற்போது பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில், ராஷ்மிகா பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்த்து அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த கிசுகிசுக்கு நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

நமக்கென்று ஒரு கதை இருந்தால் அதை செய்ய வேண்டும். வேடிக்கையாக இருக்கும். நாங்கள் நல்ல நடிகர்கள், இயக்குனர்களை ஏமாற்ற மாட்டோம்,” என்று கூறினார்.

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.

70 ஆண்டுகளுக்கு முன் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் என்றும் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.

லைக்கா தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்திருந்தனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

நேற்று படம் வெளியானது முதலே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

அதன் படி ரூபாய் 80 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று கூறலாம். இனி வரும் நாட்களில் மேலும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களில் இதன் வசூல் எகிறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்திற்கு PS1 ப்ரீ-புக்கிங்கில் செயலிகளே கிராஷ் ஆகும் அளவிற்கு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ponniyan Selvan collections in 100 crore

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் புதிய இசையமைப்பாளர்?

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் புதிய இசையமைப்பாளர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்தி என்னவென்றால், பிரபல ஒலி பொறியாளரும் இசையமைப்பாளருமான நெரியன் வில்பர்ட் ‘துணிவு’ படத்தின் பின்னணி இசைக்காக ஜிப்ரனுடன் ஒத்துழைக்கிறார்.

அக்டோபர் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தீபாவளி முதல் சிங்கிள், டீசர் மற்றும் பிற முக்கிய அப்டேட்ஸ்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

“பொன்னியின் செல்வன் பாகுபலி அல்ல” – மணிரத்னம் ஓபன் டாக்

“பொன்னியின் செல்வன் பாகுபலி அல்ல” – மணிரத்னம் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளை அலங்கரித்தது.

சிலர் பொன்னியின் செல்வனை எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலியுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய மணி ரத்னம் , “இராஜராஜ சோழனின் வாழ்க்கைக் கதையை கல்கி எழுதியுள்ளார்.

பாகுபலி ஒரு கற்பனை படம். அதில் ஹீரோயிசம் உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. PS Iல் அப்படி ஒரு சூப்பர் ஹீரோ இல்லை.” என்றார் அவர்.

Mani Ratnam

ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை ‘தாதா 87’ திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை ரீஎன்ட்ரீ கொடுத்து ‘ஹரா’ படத்தை இயக்கி வருபவர் விஜய்ஸ்ரீ ஜி.

இவர் கடந்த 26 வருடங்களாக மக்கள் தொடர்பாளராக கேமராவிற்கு பின் இருந்த நிகில் முருகனை கேமராவிற்கு முன் ‘பவுடர்’ படம் மூலம் கதை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும்.

படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில்…

“அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது.

ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“ஓர் இரவில் நடக்கும் இந்த கதை நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பணிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும்,” என்று கூறினார்.

மேக்கப் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் விஜய்ஸ்ரீ ஜி நடித்துள்ளார். பரட்டை என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

பாசமிகு தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் கதைப்பகுதிகளில் வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் நடிக்கின்றனர்.

உயர் அதிகாரிகளால் அவமதிக்க படும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிகில் முருகன் வருகிறார்.

அரசியல்வாதிகளால் வாழ்வாதாரங்களை இழக்கும் இளைஞர்களும் கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.

இவர்கள் நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர்.

மேற்கண்ட விஷயங்கள் முதல் பாகமாக உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 (நாளை) பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

Vijay Sri G launches Nikil Murukan as protagonist in Powder

Director Vijay Sri G, who re-launched National Award winning actor Chaaru Haasan who took a break from acting after being part of many successful movies, as the protagonist with the film ‘Dhadha 87’, is directing ‘Haraa’ with actor Mohan, who has acted in many silver jubilee films and occupied a place in the hearts of the people.

More Articles
Follows