தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்க ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள படம் ‘கண்ணகி’.
இதில்.. வித்யா பிரதீப், அம்மு பிராமி, கீர்த்தி பாண்டியன், ஷாலின் ஸோயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரஹ்மான் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் டிசம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் யஸ்வந்த் கிஷோர் பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். நியாயத்தை கேட்கும் பெண்களைப் பற்றிய கதை இந்த படம் என்பதால் ‘கண்ணகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் பெண்களும் மனநிலையை பேசும் ஹைபர்லிங் படமாக உருவாகியுள்ளது.
Ammu Abirami Vidhya Keerthy starring Kannagi