சென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்

Petta beat Viswasam collection in Chennai Box officeவருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜனவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் வெளியானது.

இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்தனர்.

20 வருடங்களுக்கு முன் பார்த்த அதே ரஜினியை பார்த்தோம். ரஜினி தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என பேட்ட படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.

அதுபோல் விஸ்வாசம் ஒரு குடும்ப படம். முதல் பாதியை விட 2ஆம் பாதியில் அஜித் கண்கலங்க வைத்துவிட்டார் என விஸ்வாசம் பற்றி கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

பேட்ட படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.10 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் ரூ. 89 லட்சங்களை மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பு : தமிழக வசூல் நிலவரங்கள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. இதுவரை வந்துள்ள தகவல்களும் உறுதியானதாக இல்லை.

Petta beat Viswasam collection in Chennai Box office

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…
...Read More

Latest Post