Wanted VIK-RAM..; ‘விக்ரம்’ படத்துடன் இணைந்த ‘பஞ்சதந்திரம்’ டீம்.; சூப்பர் கிரியேட்டிவ்

Wanted VIK-RAM..; ‘விக்ரம்’ படத்துடன் இணைந்த ‘பஞ்சதந்திரம்’ டீம்.; சூப்பர் கிரியேட்டிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்த படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கொடுக்கும் செம ட்விஸ்ட்

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் கமலுடன் நடித்த ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் பேசிய ‘கான்பிரன்ஸ் கால்’ போலவே ஒருவருக்கொருவர் பேசுவதாக உள்ளது.

அந்த 2 நிமிட வீடியோவில்…

‘Panchatantram’ team up with ‘Vikram’ film; Super Creative

வட இந்தியா & தென் இந்தியா குறித்த கேள்விக்கு கமலின் நெத்தியடி பதில்

வட இந்தியா & தென் இந்தியா குறித்த கேள்விக்கு கமலின் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதில் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து கமல் சுற்றுப் பயணம் செய்து படத்தின் புரோமோசன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் விஜய்…; இயக்குநர் இவரா.?

அப்போது வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல் பதிலளித்தாவது…

‘முதலில் நான் ஒரு இந்தியன். என்னைப் பொறுத்தவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது. தாஜ்மஹால் எங்களுடையது.

கன்னியாகுமரி எந்த அளவுக்கு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவுக்கு காஷ்மீர் எனக்கு சொந்தம்’ என்று நெத்தியடியாக பதில் கொடுத்தார் கமல்.

Kamal Haasan answers the question about North India & South India

பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு.; சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ பட இசை விழா

பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு.; சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ பட இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது.

படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.

படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்,

சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்

ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

***

Legend Saravanan’s ‘The Legend’ trailer & audio launch to take place in a grand manner

இரண்டு விஜய் இணைந்த அக்னிச் சிறகுகளை இணையத்தில் பறக்க விட்ட சூர்யா

இரண்டு விஜய் இணைந்த அக்னிச் சிறகுகளை இணையத்தில் பறக்க விட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் நவீன் M உடைய ஸ்டைலிஷான உருவாக்கம், குறிப்பாக விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் அதிரடியான திரை தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

Amma Creations தயாரிப்பாளர் டி சிவா கூறியதாவது..,

“படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த அக்னிச் சிறகுகள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் முழு குழுவிற்கும் மிகவும் முக்கியமான நெருக்கமான மற்றும் சிறப்பு வாய்ந்த திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை உருவாக்குவது மிகுந்த சவால்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது. தற்போது டீசருக்கு கிடைத்துள்ள அற்புதமான வரவேற்பைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவருமே திரையில் மேஜிக்கை உருவாக்குவதில் வல்லவர்கள். இந்த படத்தில் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும், திரையில் முற்றிலும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். டீசரில் உள்ள குரல்வழி சொல்வது போல், இந்த திரைப்படம் இரண்டு கிளாடியேட்டர்களுக்கு சொந்தமானது,

மேலும் அவர்களின் மாயாஜால திரை இருப்பு மற்றும் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.

இயக்குனர் நவீனின் அட்டகாசமான உருவாக்கத்தில் திரைப்படம் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது.

இத்திரைப்படம் அவரை தமிழ் சினிமாவில் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மற்ற நட்சத்திர நடிகர்களில் அக்‌ஷரா ஹாசன், ரைமா சென், சம்பத், சென்ட்ராயன், ஜேஎஸ்கே மற்றும் பல வெளிநாட்டு மற்றும் இந்திய கலைஞர்களும் இணைந்து நடித்துள்ளார்கள்.

அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

“அக்னி சிறகுகள்” படத்தினை Amma Creations சார்பில் T.சிவா தயாரிக்க, இயக்குநர் நவீன் எழுதி இயக்குகிறார். படத்தின் இசை – M.நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவு – K.A.பாட்சா, எடிட்டிங் – வெற்றி கிருஷ்ணன், நிர்வாக தயாரிப்பு – பரஞ்சோதி துரைசாமி ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

குறிப்பாக, விக்டர் இவனோவ் (ஆஸ்கார் விருது பெற்ற ஸ்டன்ட் இயக்குனர்), ஜைதர்பெக் குங்குஷினோவ் (ஸ்டண்ட்ஸ்), அலெக்சாண்டர் டெரெகோவ் (கார் சேஸ் நிபுணர்), பௌர்ஷான் அபிஷேவ் மற்றும் மகேஷ் மேத்யூ (இந்திய ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் ஸ்டண்ட் நிபுணர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

விஜய் ரத்தினம் (ஒலி வடிவமைப்பாளர்), ரஹமப்துல்லா (ஒலி கலவை), சதீஷ் G (இரண்டாம் யூனிட் கேமராமேன்), R.கிஷோர் (கலை), அஜாஷ் புக்கடன் (ஆக்சன் எடிட்டர்), S. வர்மா ரகுநாத் (வண்ணக்கலைஞர்), யுகபாரதி-நவீன்-தெருக்குறள் அறிவு ( பாடல் வரிகள்), சௌபரணிகா (ஆடை வடிவமைப்பாளர்), சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), மற்றும் N.மகேந்திரன் (புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்) ஆகியோர் இந்தப் படத்தில் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களாக உள்ளனர்.

“அக்னி சிறகுகள்” திரைப்படம் ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கஜகஸ்தான் மற்றும் இந்தியாவில் (கொல்கத்தா) என பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Agni Siragugal teaser launched by Suriya

கமர்சியல் சினிமாவிற்குள் வந்துவிட்டேன்.. சுயாதீன படமெடுக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம்.. – ரஞ்சித்

கமர்சியல் சினிமாவிற்குள் வந்துவிட்டேன்.. சுயாதீன படமெடுக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது,….

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை.

சேத்துமான் விமர்சனம்.; ருசி தேடிய மிருதனின் உணவு அரசியல்

அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது.

என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஸியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன்.

கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று.

சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறது.

சரி இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.

நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர விசிறி. யாரும் எனக்கு அவர் எழுத்தை அறிமுகப்படுத்தவில்லை. நானாக தேடி கண்டடைந்த எழுத்தாளர் அவர். அவருடைய எழுத்து என்னை ரொம்பவே பாதித்த ஒரு எழுத்து. அவரின் நிழல் முற்றம், கூளமாதாரி, கங்கணம் போன்ற நாவல்கள் எனக்கு பிடிக்கும்.

கூள மாதாரி நாவலில் திருச்செங்கோடு குறித்த விவரணைகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமான நாவல் அது. குழந்தைகளின் உலகத்தை மிக அற்புதமாக அந்த நாவல் காட்சிப்படுத்தி இருக்கும்.

அந்த உலகம் எந்தளவிற்கு ஈவு இரக்கம் அற்ற உலகம் என்பதும் அதில் உண்டு. பண்ணை அடிமை முறையில் வாழும் குழந்தைகளின் வாழ்கையை உள்ளடக்கியது அந்த நாவல்.

சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான். இது எப்படி திரைப்படமாக சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது ஒரு முக்கியமான திரைப்படமாக வரும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

இத்திரைப்படத்தை போட்டா பணம் திரும்ப வருமா..? என்கின்ற வணிக ரீதியில் அணுகாமல், பணம் திரும்ப வராவிட்டாலும் பரவாயில்லை.

இந்தக் கதையை நாம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இதை முன்னெடுத்துச் சென்றோம்.

நீலம் தயாரிப்பில் படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம்.

கதை ஒரு முறை முடிவாகிவிட்டது என்றால், பின்னர் அதில் எந்தவித குறுக்கீடுகளும், நடிகர்கள் தொடர்பான சிபாரிசுகளும் இருக்காது.

நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம், எதை சொல்லக்கூடாது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன்.

இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதால், அந்த தீட்டை கழிக்க கோவில் சார்பாக யாகம் நடத்தப்பட்ட இந்தியா இது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

இது போன்ற அரசியல் பேசுவதில் இயக்குநர் தமிழுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.

இது படக்குழுவினர் உட்பட எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கிறது.

இப்பொழுது கூட கான் திரைப்பட விழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வருகின்ற படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல.

தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் அங்கு தேர்வாகின்றன. அவையே அங்கு திரையிடப்படுகின்றன.

இது போன்ற சுயாதீனப் படங்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தையும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்.

I have come into commercial cinema .. Those who want to shoot independently can approach me .. – Ranjith

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று ‘அரபி’ படத்தில் நடிகரானார் பாஜக அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரா ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை அள்ளியவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ்.

இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது கைகளை இழந்து வாழ்ந்து வருகிறார்.

ஆனாலும் தன்னம்பிக்கை தளராது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

பின்னர் மற்ற விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். முக்கியமாக நீச்சல், குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், கே.எஸ்.விஸ்வாஸ் சாதனைகளை பார்த்த இயக்குநர் ராஜ்குமார் அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க முன்வந்தார்.

அதன்படி விஸ்வாஸின் சாதனை வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீவிஜய ராகவேந்திரா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில விஸ்வாஸின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

அண்ணாமலை நடித்துள்ள கன்னடப் படமான ‘அரபி’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளிவைப்பு.

தமிழக பாஜக தலைவர் திரு K அண்ணாமலை அவர்கள் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.

உண்மை கதை என்பதால் ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடித்துள்ளார் அண்ணாமலை ஜீ.

#Annamalai | #Arabbie | #KannadaMovie

BJP Annamalai became an actor in the film ‘Arabbie’ earning only one rupee

More Articles
Follows