வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்று
‘சரவணா ஸ்டோர்ஸ்’.

இந்த நிறுவன விளம்பரங்களில் விதவிதமாக நடித்து மக்களை வியக்க வைத்தவர் சரவணன்.

இவர் தற்போது திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இப்படம் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

ஜேடி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கீத்திகா திவாரி நாயகியாக நடிக்கிறார்.

ஏற்கெனவே, பாடல் காட்சிகளுக்கே சில பல கோடி செலவு செய்து படமாக்கியதாக.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஓர் ஆக்ஷன் காட்சியில் வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவியை அவர் தெறிக்க விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Saravana Stores Saravanan Arul is in full form

Legend Saravanan (2)

அன்பிற்கினியாளும் அருண் பாண்டியனும்..; 18 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ.!

அன்பிற்கினியாளும் அருண் பாண்டியனும்..; 18 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’.

இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்..

நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது,

“அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம்.

நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித்.

மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்லபடத்தை எடுத்துள்ளோம்.

படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் கோகுல் பேசியதாவது,

“இந்தப்படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால் .

நான் அருண்பாண்டியன் சாரிடம் படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது.

எங்களுக்கு இந்தப்படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பாட்டிலே அவர் நிறையமுறை கைத்தட்டல் வாங்கினார். அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார்.

ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

படத்தில் எல்லாப்பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார். மீடியா எப்போதும் நல்லபடங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை. இந்தப்படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி ” என்றார்

சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன் பேசியதாவது,

“நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியா தான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப்படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியதாவது…

“இந்தப்படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி.

மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

நடிகர் பிரவின் பேசியதாவது,

“எனக்கு இந்தப்படம் தான் என் கரியரின் ஆரம்பம். எனக்கு வாய்ப்பளித்த அருண்பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

கீர்த்தி பாண்டியன் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். அனைவருக்கும் நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் ஜாவித் பேசியதாவது,

“இந்தப்படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாக சொன்னார்கள். அதற்கான காரணம் அருண்பாண்டியன் சாரும் கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் தான். இந்தப்படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு நல்ல ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Arun Pandiyan emotional speech at Anbirkiniyal press meet

திருமணம் செய்வதாக ஆசை காட்டி 70 லட்சம் வாங்கியதாக ஆர்யா மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஆசை காட்டி 70 லட்சம் வாங்கியதாக ஆர்யா மீது பெண் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya (2)‘கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் (2019) செய்துக் கொண்டார் ஆர்யா.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகவும் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறாராம் விட்ஜா.

இந்த பெண் பிரதமர் & குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைனில் ஆர்யா மீது அளித்துள்ள புகாரில்…

“பணத்திற்கு கஷ்டப்படுவதாக ஆர்யா கூறி தன்னிடம் பணம் பெற்றதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” எனவும் ஆர்யா கூறியதாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா மீது, பெண் ஒருவர் மோசடி புகார் அளித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Arya faces money fraud complaint from srilankarn girl

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் மோதவிருந்த அஜித் ரசிகர்..; விஜய்சேதுபதியை மிஞ்சி இருப்பாரோ..?

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் மோதவிருந்த அஜித் ரசிகர்..; விஜய்சேதுபதியை மிஞ்சி இருப்பாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த படம் ‘மாஸ்டர்’.

இந்த படம் பொங்கல் தினத்தையொட்டி தியேட்டர்களில் ரிலீசாகி அதன் பின்னர் ஓடிடியில் வெளியானது.

சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அந்த பவானி கேரக்டரில் முதலில் ஆர்.கே.சுரேஷை தான் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

பின்புதான் சதீஷ் என்ற தயாரிப்பாளரின் ஆலோசனையால் விஜய்சேதுபதி கமிட்டாகியுள்ளார்.

விஜய்யின் JD கேரக்டரை விட விஜய்சேதுபதியின் பவானி கேரக்டரே அதிகளவில் பாராட்டப்பட்டதும் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் தீவிர ரசிகர் நடிகர் ஆர்.கே. சுரேஷ். இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் தல ரசிகராகவே நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

I Missed Playing Bhavani Role In Master says Popular Actor

RK Suresh

முதன்முறையாக பேய் படத்தில் விஜய் சேதுபதி.; இயக்குனர் இவரா.?

முதன்முறையாக பேய் படத்தில் விஜய் சேதுபதி.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi (2)மாஸ் ஹீரோ… மாஸ் ஹீரோக்களுக்கு வில்லன்… கெஸ்ட் ரோல்… இப்படி எந்த வேடம் என்றாலும் அதிலும் முத்திரை பதிப்பவர் விஜய்சேதுபதி.

தற்போது கூட காமெடியன் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் மக்கள் செல்வன்.

இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக பேய் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

தற்போது முருகானந்தம் தயாரிப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடிக்க இவர்களுடன் முக்கிய வேடத்தில் இணைகிறாராம் விஜய்சேதுபதி.

இதற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடக்கிறது.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

Makkal Selvan Vijay Sethupathi in ghost film ?

விஜய்-நெல்சன் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..; வேற மாரீ.. வேற மாரீ..

விஜய்-நெல்சன் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..; வேற மாரீ.. வேற மாரீ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sivakarthikeyan (2)‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதில் சிவகார்த்திகேயன் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அந்த வரிசையில், நெல்சன் அடுத்ததாக இயக்கவுள்ள ‘விஜய் 65’ படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் எழுத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது உறுதியானால் அந்த பாடல் வேற மாரீ.. வேற மாரீ.. லெவலில் இருக்கும் என நம்பலாம்.

Sivakarthikeyan to join Thalapathy 65 project ?

More Articles
Follows