லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனர் பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படம்.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கரும் நடித்திருக்கிறார்.

ரூ 210 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊர்வசி ரெளடாலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. சேறு பூசிக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சேறுக்குளியல் என்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிளியோபாட்ரோ இதே சேறுக்குளியலை மிகவும் விரும்புவார். சருமத்திற்கு இந்த குளியல் மிகவும் நல்லது.

என ஊர்வசி ரெளடாலா தெரிவித்துள்ளார்.

Legend Saravanan’s heroine latest pic goes viral

1623764604311

நாற்காலி சண்டை.. பதவி பேரம்..; முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம்

நாற்காலி சண்டை.. பதவி பேரம்..; முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narayanasamyபுதுச்சேரியில் அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை.

பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“பெட்ரோல் டீசல் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதுதான் அதற்கு காரணம்.

ஆனால் அவர்கள் மாநில அரசுகளின் மேல் பழி போடுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ஏழைகள் வயிற்றில் அடித்து விலை உயர்த்தப்படுகிறது.

அதனால் கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்ற கட்டுப்படுத்த ஊரடங்கை படிப்படியாக குறைக்க வேண்டும்.

புதிய அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். மக்களை கைவிட்டுவிட்டார்கள்.

அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்காக சண்டை போடுகிறார்கள்.

தேர்தலின்போது புதுச்சேரியை நிதிக் கமிஷனில் சேர்ப்போம், மில்களை மீண்டும் இயக்குவோம் என பா.ஜ.க பல தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் தற்போது நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Ex cm Narayanasamy slams new government

ஆயுதபூஜை ஸ்பெஷலாக தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ரெடியாகும் சிம்பு

ஆயுதபூஜை ஸ்பெஷலாக தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ரெடியாகும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanaadu simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் & படத்தின் அப்டேட் வேண்டும் என சிம்பு ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனையடுத்து மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் யுவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராகவிட்டாலும் தற்போது கொரோனா ஊரடங்கால் தியேட்டர் மூடப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு மாதங்களில் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

STR’s treat for his fans on Ayudha Pooja

தமிழில் விஜய்சேதுபதி… தெலுங்கில் தமன்னா… கன்னடத்தில் சுதீப்

தமிழில் விஜய்சேதுபதி… தெலுங்கில் தமன்னா… கன்னடத்தில் சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master CHEFசினிமாவின் டாப் ஸ்டார்ஸ் பலர் டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக உருவாகி வருகின்றனர்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன், மலையாளத்தில் மோகன்லால் முதல் தமிழில் கமல்ஹாசன் வரை இந்த பட்டியல் நீண்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதற்கு முன்னரே சரத்குமார், சூர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால் என பல நடிகர்கள் தொகுப்பாளர்களாக இருந்துள்ளனர்.

தற்போது விஜய்சேதுபதியும் ஓரிரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் விஜய் சேதுபதி.

இது போன்ற நிகழ்ச்சியை கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கவுள்ளனர்.

இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தமன்னா தொகுத்து வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Master chef hosts details revealed

‘மிக மிக அவசரம்’ படம் எந்த வலியை பேசியதோ அதை ஸ்டாலின் மாற்றியமைத்து விட்டார்.. – ‘லிப்ரா’ ரவீந்தர்

‘மிக மிக அவசரம்’ படம் எந்த வலியை பேசியதோ அதை ஸ்டாலின் மாற்றியமைத்து விட்டார்.. – ‘லிப்ரா’ ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

miga miga avasaramபெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்
உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும்

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது.

பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக வி.ஐ.பி க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்து வருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம்.

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் பதினொன்றாம் தேதி, அத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம்.

திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் மிக மிக அவசரம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது.

இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

“முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

எந்த வலியை மிக மிக அவசரம் படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு.

நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியை சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்?

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய திரு. ஜெகன்நாத் அவர்களையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.

இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா ப்ரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமை கொள்ளும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நொடியில் இருந்து, சொல்லப்போனால் வெற்றிச் செய்தி வந்த நொடியில் இருந்தே, கொரோனாவிற்கெதிரான பெரும்போரில் முன்களத்தில் நின்று சமரிட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவரது ஓயாத செயல்பாடுகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும், அதிரடி அறிவிப்புகளாலும் மாற்றுக் கட்சியினரும் வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் ஆட்சியை செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த அறிவிப்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் இனி சூடப்போகும் மகுடங்களின் உச்சியில் வைரமாய் ஜொலிக்கும். மிக மிக அவசரம் படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகவும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இந்த நேரத்தில் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாத சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன்.

நன்றி.

ரவீந்தர் சந்திரசேகர்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்

Libra Productions Ravinder thanked TN cm MK Stalin

சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganeshதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள இந்த கோயிலில் நடிகரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் தரிசனம் செய்துள்ளார்.

அவருக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி விஐபி தரிசனத்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலறிந்த கிராம மக்கள் செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் ஐசரி கணேசனை சிறுவாபுரி கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.

இதனையறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியதை அடுத்து ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்

Ishari Ganesh has been imprisoned by the public in siruvapuri

More Articles
Follows