நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithஇயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து

“குதிரைவால்” திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது.

தொடர்ந்து “ரைட்டர்” & “பொம்மை நாயகி” படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் “சேத்துமான்” எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் ( IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக தேர்வாகியிருக்கிறது “சேத்துமான் ” திரைப்படம்.

தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ்

ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா

எடிட்டிங் – CS பிரேம் குமார்.

இசை – பிந்து மாலினி.

பாடல்கள்- யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல்.

கலை- ஜெய்குமார்.

சண்டை – ஸ்டன்னர் சாம்.

ஒலி வடிவமைப்பு- ஆண்டனி BJ ருபன்.

கதை ,வசனம் – பெருமாள் முருகன்.

திரைக்கதை இயக்கம்- தமிழ்

தயாரிப்பு – பா.இரஞ்சித் .

பி ஆர் ஓ – குணா.

Pa Ranjith’s next film is titled Sethu Maan

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kutty Storyவேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல் தொகுப்பை கௌதம் மேனன் இரண்டாவது தொகுப்பை விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ளனர்

குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் Dr.ஐசரி .K. கணேஷ் பேசுகையில்…

” நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது உடனே ஒப்புக்கொண்டேன் முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது.

பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில்…

“நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது.

இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம்.

நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார்.

முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது என்றார்

இயக்குனர் விஜய் பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது.

மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது.

உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்.. நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன் முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..

அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன் ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்.

இயக்குனர் நலன் குமாரசாமி பேசியதாவது…

“லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.

அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன்.

இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன்..

அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார்… மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர் நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன்.

11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன் ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார்..

ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை அமைந்துள்ளது என்றார்.

Producer’s interesting speech at Kutty Story press meet

‘டான்’ படத்தில் வெற்றி கூட்டணி..: கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு செம கவுண்ட்டர் கொடுத்த சூரி

‘டான்’ படத்தில் வெற்றி கூட்டணி..: கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு செம கவுண்ட்டர் கொடுத்த சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sooriசிவகார்த்திகேயன் & சூரி இணைந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

இந்த படங்களில் ஹீரோயினை விட சூரியுடன் தான் செம கெமிஸ்டரியில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த வெற்றி கூட்டணி தற்போது ‘டான்’ படத்தில் இணைகிறது.

இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதனால் டான் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் சந்திப்போம் நண்பா -என்று டுவிட் போட்டார் சூரி.

அதில், ”நண்பா… பஸ்ட் டுவீட்ட ஒழுங்கா படிங்க. அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று அவரை கலாய்த்து பதிவிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு கொஞ்சமும் அசராமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி காட்சியை பதிலாக பகிர்ந்துள்ளார் சூரி.

Happy to share the scren pace once akain vith my dear most buddy @Siva_Kartikeyan see you at the cambus buddy.. #DON

Buddy first tweeta olunga padi… ambuttum spelling mistake…

Soori’s timing counter to Siva Karthikeyan

‘சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..; ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார் எடப்பாடி

‘சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..; ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார் எடப்பாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Edappadi Palaniswamiஇன்று பிப்ரவரி 5 தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது… வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது.

சட்டசபை விதி 110ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்

பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

கொரோனா மற்றும் இதர புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்,’ என தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு முன் கடந்த 2016ல் ஆண்டில் விவசாய கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TN govt announces Rs 12,110 cr farm loan waiver for over 16 lakh farmers

என்னோட பாஷா… எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாட்டு..; நெகிழும் ‘தேவதாஸ் பார்வதி’

என்னோட பாஷா… எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாட்டு..; நெகிழும் ‘தேவதாஸ் பார்வதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBநான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல்.

இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.

இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் டைமில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்று ள்ளது.

‘தேவதாஸ் பார்வதி’ ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார்.

அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ஒரு உலக மகா இசைக் கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம் பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குநர் ஆர்ஜி கே.

இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாக நடித்திருக்கிறார் ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடித்திருக்கிறார் .

இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார் .

வினோத் ராஜேந்திரன் ,மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என் .வி. அருண் இசையமைத்துள்ளார்.

‘என்னோட பாஷா’ என்கிற அந்தப் பாடலை ஹர்ஷா எழுதியுள்ளார். தமிழில் எஸ்பிபி பாடிய முதல் பாடலை புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.

இறுதிப்பாடலை இளைஞர் ஹர்ஷா எழுதியிருக்கிறார்.

இப் படத்திற்காக எஸ்பிபியிடம் பாடக் கேட்டபோது கதையைக் கேட்டு இருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துப் போய்விடவே பாடச் சம்மதித்திருக்கிறார்.

அதே இளமை உற்சாகத்துடன் பாடியும் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடல் பதிவான அனுபவத்தை எண்ணி எண்ணி படக்குழுவினர் நெகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாடலை இயக்குநர்கள் கே.எஸ் .ரவிக்குமார்,விக்னேஷ் சிவன், அரசியல்வாதி எச்.ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,பிரியா வாரியார் ,தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் போன்ற பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரமாண்டமான வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

‘தேவதாஸ் பார்வதி’ ஒரு பைலட் திரைப்படம். இதன் விரிவான முழுநீள திரைவடிவம் விரைவில் உருவாக இருக்கிறது.

பைலட் திரைப்படம் என்றாலும் பிரம்மாண்டமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தன் இறுதிப்பாடலை எஸ்பிபி பாடியதன் மூலம் தங்கள் படத்திற்கு ஒரு அழுத்தமான முகவரியைக் கொடுத்து சென்றுள்ளார் என்று பூரித்துக் கொண்டு இருக்கிறது படக்குழு.

SONG LINK

Legendary singer SPB’s last song details

சிம்புவின் ‘மாநாடு’ டீசர் ‘TENET’ காப்பியா.? வெங்கட் பிரபு கொடுத்த நெத்தியடி பதில்

சிம்புவின் ‘மாநாடு’ டீசர் ‘TENET’ காப்பியா.? வெங்கட் பிரபு கொடுத்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhu strசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாநாடு’.

இப்பட டீசரை சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3ல் ரிலீஸ் செய்தனர்.

சிம்பு ரசிகர்கள் இந்த வெறித்தனமான டீசரை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இப்பட டீசர் ஹாலிவுட் படமான டெனெட்-ன் காப்பி என விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு…

”மாநாடு படத்தை டெனெட் படத்தோடு ஒப்பிடுவது எங்களுக்கு கவுரவமே.

ஆனால் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உண்மையில் டெனெட் படம் எனக்கு புரியவில்லை. டிரைலருக்காக காத்திருங்கள். அப்போது வேறு படத்துடன் ஒப்பிடலாம்” என தெரிவித்துள்ளார்.

I’m very honored that people are comparing our #maanaadu teaser with #tenet but unfortunately this ain’t connected with it!! To be honest even I didn’t understand #tenet wait for the trailer! Then u might compare us with some other film
Wait for our #maanaadu trailer
-Director Venkat Prabhu

Venkat Prabhu’s reply to his haters

More Articles
Follows