ஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்கும் அஹமது

jayam ravi 26ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இதில் ஹீரோயின்களாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரும் நடிக்க ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து ஜெயம் ரவியின் 25-வது படமாக ‘தனி ஒருவன் 2’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குகிறார்.

இதனையடுத்து ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அஹமது இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெயம் ரவி.

Overall Rating : Not available

Related News

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல,…
...Read More
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க…
...Read More

Latest Post