மீண்டும் ரீமேக் படம் இயக்கும் அஹமத்; ஜெயம் ரவி நடிக்கிறார்

மீண்டும் ரீமேக் படம் இயக்கும் அஹமத்; ஜெயம் ரவி நடிக்கிறார்

Ahamed teamsup with Jayam Ravi for Baby remake in Tamil

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்கள் இயக்கியவர் அஹமத்.

இதில் உதயநிதி நடித்த மனிதன் படம் அக்‌ஷய்குமார் நடித்து ஹிந்தியில் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீ-மேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் இந்தியில் இருந்து தமிழுக்கு கொண்டு வருகிறார்.

அஹமத் அடுத்து இயக்கவுள்ள படம் அக்‌ஷய்குமார் சூப்பர் ஹிட்டான பேபி படம்.

இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, ‘பாகமதி’ பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Ahamed teamsup with Jayam Ravi for Baby remake in Tamil

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ரிலீஸ் அனைவருக்கும் நல்லநாளாக அமையும் : வி சத்யமூர்த்தி

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ரிலீஸ் அனைவருக்கும் நல்லநாளாக அமையும் : வி சத்யமூர்த்தி

vijay sethupathi and distributor sathya murthyவிஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி சத்யமூர்த்தி

தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்’.

இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார்.

“இது வரை நான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது.

வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.

ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தை சதீஷ் தயாரித்துள்ளார். நாயகியாக காயத்ரி, நிஹாரிகா நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் தயாரித்துள்ளார்.

மீண்டும் தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்..? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்

மீண்டும் தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்..? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்

2 point 0 stillsலைகா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக ரூ. 400 கோடியில் தயாராகியுள்ள படம் 2.0.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி 26ஆம் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு, பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது சிஜி (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் இந்த பணிகள் மேலும் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

மே அல்லது ஜுன், ஜுலை வரை கூட தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

விஜய்யின் இன்ட்ரோ சாங்கை படமாக்கிய முருகதாஸ்

விஜய்யின் இன்ட்ரோ சாங்கை படமாக்கிய முருகதாஸ்

Vijay AR Murugadoss‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது 3வது முறையாக விஜய்யும் முருகதாசும் இணைந்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் சம்பந்தபட்ட சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கினாராம் முருகதாஸ்.

இப்பாடல் விஜய்யின் அறிமுகப் பாடல் என கூறப்படுகிறது.

இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் இதன் டைட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

மகளிர் தினத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்

மகளிர் தினத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்

Parthibans daughter Keerthana marriage fixed on Womens dayமணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா சிறுமியாக நடித்திருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

தற்போது 16 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் அதில் நடித்துள்ள கீர்த்தனாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

வருகிற மார்ச் 8ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெறவுள்ளதாம்.

Parthibans daughter Keerthana marriage fixed on Womens day

பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றி பேசும் கஸாலியின் மனுசனா நீ

பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றி பேசும் கஸாலியின் மனுசனா நீ

ghazali director“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”.

பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

“மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை.

பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும்.

அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது “மனுசனா நீ”.

துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்துள்ளார்.

தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சினைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் போகிற படங்கள் பல மடங்கு இருக்கின்றன. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்ட கஸாலி, அவர்களுக்கு உதவும் நோக்கில், ‘H3 சினிமாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாக பிரச்சனையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக் கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குத் தேவையான ஸ்டூடியோ நிர்மாணிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

அதுபற்றிய விவரமான அறிவிப்பு, ‘மனுசனா நீ’ பட வெளியீட்டிற்குப் பின் வெளியாகும். நம்பிக்கையோடு வந்தவர்களை சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் கஸாலி.

“மனுசனா நீ” எனது முதல் படம் என்றாலும், எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு இயக்குநராக நான் சந்தோசப்படுகிறேன்.

விரைவில் அந்த சந்தோசத்தை மக்கள் இன்னும் இரட்டிப்பாக்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

இப்படம் வெளியான உடனேயே எனது அடுத்த படத்திற்கான வேலைகளும், மேலே குறிப்பிட்ட சிறு படங்களை வெளியிடும் முயற்சிகளும் தொடங்குவேன் என்கிறார் நம்பிக்கையோடு!

Ghazali directorial Manusanaa Nee release updates

manusanaa nee movie stills

More Articles
Follows