மீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.

மீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namita pramodஜாலி எல்எல்பி என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அஹ்மத் இயக்கிய இப்படம் மனிதன் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இப்படம் பஹத்பாசில் நடித்து மலையாளத்தில் வெற்றிப் பெற்ற
‘மகேஷிண்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் ஆகும்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக பிரபல மலையாள நடிகையான நமிதா பிரமோத் நடிக்கிறாராம்.

தமிழுக்கு ஏற்ப இப்படத்தில் நிறைய மாற்றங்களை செய்துள்ளதாகவும் முக்கிய வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi and Namitha Pramod romance in Maheshinte Prathikaaram Tamil Remake

ஷாரூக்கான்-ஐஸ்வர்யாராய் இணையும் புதிய படம்

ஷாரூக்கான்-ஐஸ்வர்யாராய் இணையும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanjay Leela Bhansalisபிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாஹிர் லூதியான்வி மற்றும் அம்ரிதா பிரேம் காதல் கதையை படமெடுக்க சஞ்சய் லீலா பன்சாலி திட்டமிட்டுள்ளார்.

பஞ்சாபின் முதல் பெண் கவிஞரான அமிர்தா பிரேமம் நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக காதலர்களும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே அதன்படி இந்த கதையில் சாஹிர் லூதியான்வி கேரக்டரில் ஷாருக்கானும், அம்ரிதா பிரிதம் கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

Shahrukh Khan and Aishwarya Rai to Romance for Sanjay Leela Bhansalis movie

ஸ்பைடரை முடித்துவிட்டு சரத்குமாருடன் இணையும் மகேஷ் பாபு

ஸ்பைடரை முடித்துவிட்டு சரத்குமாருடன் இணையும் மகேஷ் பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Spyder Mahesh Babu teams up with Sarath Kumarஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார்.

இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

After Spyder Mahesh Babu teams up with Sarath Kumar

‘என் உடம்பில் நான் என்ன செஞ்சா உங்களுக்கென்ன..?’ சூடான ஸ்ருதி

‘என் உடம்பில் நான் என்ன செஞ்சா உங்களுக்கென்ன..?’ சூடான ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruthihassanமலையாளத்தில் வெற்றிப் பெற்ற பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது அதில் ஸ்ருதிஹாசன் நடிப்பது பல விமர்சனங்கள் எழுந்தன.

அதுபோல் பல கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து திடீரென ஸ்ருதிஹாசன் விலக, அதற்கும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர்.

கேன்ஸ் விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்கலாமே என்றனர்.

இதனிடையில் தன் உதட்டை அவர் அறுவை சிகிச்சை செய்து அழகு படுத்தி கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தற்போது அவர் நடித்து வெளிவர உள்ள ‘பெஹசன் ஹோரி தேரி’ ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில்…

“என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் கூற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.

Shruthihassan got angry about critics

shruthihassan

கேரளாவில் அசத்தப் போகும் அஜித்தின் விவேகம்

கேரளாவில் அசத்தப் போகும் அஜித்தின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Kerala rights trade news updatesவிவேகம் படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளதால் படத்தின் விநியோகம் நன்றாகவே சூடுபிடித்துள்ளது.

5 கோடி முதலீட்டுக்கு மேல் உள்ள படங்களைத் தனித்தனியாக தான் விநியோக உரிமையை விற்க வேண்டும் எனவும், ஒட்டுமொத்தமாக தமிழக உரிமையை விற்கக் கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

இதனால், ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை தனித்தனியாக விற்று வருகிறார்களாம். இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தை போலவே தற்போது கேரளாவிலும் நல்ல விலைக்கு பேரம் பேசப்பட்டு வருகிறதாம்.

கேரளாவில் ரூ. 4 கோடி வரை விவேகம் படத்தின் உரிமை எட்டியுள்ளதாம்.

கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற குளோபல் யூனிட்டட் மீடியா என்ற நிறுவனம்தான் விவேகம் படத்தை இத்தனை கோடிக்கு வாங்க முன்வந்துள்ளது.

இது அஜித் படத்திற்கு கேரளாவில் பேசப்பட்ட அதிகபட்ச தொகை என சொல்லப்படுகிறது.

Vivegam Kerala rights trade news updates

சினிமா எண்ட்ரீ பற்றி ப்ரியா பவானிசங்கர் என்ன சொல்கிறார்..?

சினிமா எண்ட்ரீ பற்றி ப்ரியா பவானிசங்கர் என்ன சொல்கிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya bhavani shankarபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் ப்ரியா பவானி சங்கர்.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார்.

இவரது நடிப்புக்காகவே சீரியலை பலரும் பார்த்தனர். (ஹி..ஹி.. நாங்களும் பார்த்தோம்ல.)

கடந்த 2016-ம் ஆண்டில் மனங்கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.

இதில் 23-வது இடத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.

நடிகைகள் பட்டியலில் சீரியல் நடிகை ஒருவரே ஒருவர் இடம்பெற்றார் என்றால் அது இவர் மட்டும்தான்.

இந்நிலையில் இவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது…

“நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது உண்மைதான். இப்போதைக்கு அந்த படம் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.

Priya Bhavani sankar makes her entry in Kollywood Cinema

Priya Bhavani Shankar in tv channel

More Articles
Follows