திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனிக்காக பைக் கற்கும் நிவேதா பெத்துராஜ்

திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனிக்காக பைக் கற்கும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony and Nivetha Pethurajஅண்ணாதுரை, காளி படங்களை தொடர்ந்து திமிரு புடிச்சவன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தையும் வழக்கம் போல அவரது சொந்த நிறுவனமான விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக அவரது மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.

இதில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதில் நாயகியாக இணைந்துள்ள நிவேதா பெத்துராஜீம் போலீஸாக நடிக்கவிருக்கிறாராம்.

இதற்காக அவர் தற்போது புல்லட் ஓட்டி பழகி வருகிறாராம்.

கணேஷா இயக்கவுள்ள இதன் சூட்டிங் இன்று பிப்ரவரி 7 முதல் ஆரம்பமாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

மேலும், இப்படத்திற்காக ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பிரத்யேகமாக சிலம்பம் கற்று வருகிறாராம் விஜய் ஆண்டனி.

மீண்டும் இணையும் சிம்பு-ஓவியா; அனிமேஷன் அனிதா இயக்குகிறார்

மீண்டும் இணையும் சிம்பு-ஓவியா; அனிமேஷன் அனிதா இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Oviya teams up for new movie Anitha directorialஇந்தாண்டு தொடக்கத்தில் ‘மரண மட்டை’ என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி சிம்பு இசையமைத்திருந்தார்.

இந்த பாடலை நடிகை ஓவியா பாடியிருந்தார்.

தற்போது இவர்கள் ஒரு புதிய சினிமாவுக்காக மீண்டும் இணைகின்றனர்.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க, நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு சிம்பு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அனிதா என்பவர் இயக்குகிறார்.

இவர் ‘மாயாஜால்’ மல்டிப்ளக்ஸின் அதிபராக இருக்கிறார். மேலும் ‘பென்டா மீடியா’ என்ற அனிமேஷன் கம்பெனியையும் நிர்வகித்து வருகிறாராம்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Simbu Oviya teams up for new movie Anitha directorial

பவர் பாண்டியை ரீமேக் செய்து தனுஷாக நடிக்கும் கிச்சா சுதீப்

பவர் பாண்டியை ரீமேக் செய்து தனுஷாக நடிக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kiccha Sudeep will remake Power Pandi and will act in Dhanush Characterமுதன்முறையாக தனுஷ் இயக்கிய படம் பவர் பாண்டி.

தமிழில் மாபெரும் வெற்றிப்படமான இப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்து தயாரிக்கவிருக்கிறாராம் கிச்சா சுதீப்.

இவர் நான் ஈ மற்றும் புலி படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் அம்பரீஷ் நடிக்க, ரேவதி கேரக்டரில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.

தனுஷ் கேரக்டரில் சுதீப் நடிக்க, மடோனா கேரக்டரில் ‘நிபுணன்’ படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கிறார்.

இப்படத்தை குருதத்தா கனிகா என்பவர் இயக்குகிறார்.

Kiccha Sudeep will remake Power Pandi and will act in Dhanush Character

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; விரக்தியில் விசிறி டைரக்டர்

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; விரக்தியில் விசிறி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Visiri directorகடந்த வெள்ளியன்று விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, விஜய் யேசுதாஸின் ‘படை வீரன்’, சண்முகப் பாண்டியனின் ‘மதுர வீரன்’, சமுத்திரகனியின் ‘ஏமாலி’ ஆகிய படங்களோடு புதுமுக நடிகர்கள் நடிப்பில் ‘விசிறி’ என்ற படம் வெளியானது.

இப்படத்தை ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார்.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் ரசிகர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.

இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைத்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என இப்பட இயக்குனர் வெற்றி மகாலிங்கம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. எங்கள் ‘விசிறி படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கினோம்.

ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை.” என்றார்

விசுவாசம் படத்துடன் மற்றொரு படத்திலும் நேற்றே கமிட்டான நயன்தாரா

விசுவாசம் படத்துடன் மற்றொரு படத்திலும் நேற்றே கமிட்டான நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharaநயன்தாரா நடிப்பில் வளர்ந்துள்ள `இமைக்கா நொடிகள்’ மற்றும் `கோலமாவு கோகிலா’ ஆகியவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனையடுத்து `கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அஜித் அஜித் ஜோடியாக `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க கமிட்டானார்.

இதே நாளில் `லெக்‌ஷ்மி’, `மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்திலும் நயன்தாரா நடிக்கவுள்தாக செய்திகள் வெளியானது.

ரம்யாநம்பீசன் உறவினர் நடிகை திவ்யாஉன்னி 2வது திருமணம்

ரம்யாநம்பீசன் உறவினர் நடிகை திவ்யாஉன்னி 2வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayala Actress Dhivya Unni got 2nd marriageபாளையத்து அம்மன்,  கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளவர் மலையாள நடிகை திவ்யாஉன்னி.

இவர் மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோரின் உறவினர் ஆவார.

இவர் 2002-ல் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கே குடியேறினார்.

இந்த தம்பதியருக்கு அர்ஜுன், மீனாட்சி என்ற குழந்தைகள் உள்ளனர்.

சில காலங்கள் வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

சமீபத்தில் விவாகரத்து பெற்ற திவ்யாஉன்னி தற்போது திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த மாப்பிள்ளையும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா உன்னியின் 2வது திருமணம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malayala Actress Dhivya Unni got 2nd marriage

dhivya unni

More Articles
Follows