சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படம் முடிந்த கையோடு சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்கியிருந்தார் சிவா..

இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

எனவே அண்ணாத்த படத்திற்கு பிறகு சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் திடீரென வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியானது. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்க வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடந்தது.

எனவே வாடிவாசல் படம் தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க சென்றார் சூர்யா.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கன்னியாகுமரி நடந்து வருகிறது.

இதன்பின்னர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இவை இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம் 3’ திரைப்படத்திலும் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே சூர்யா சிவா இணையும் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பாரா.? இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஆனால் கண்டிப்பாக இந்த படம் கைவிடப்படாது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தெரிய வத்துள்ளது.

இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதால் அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதால்தான் இந்த தாமதம் எனவும் தெரிய வந்துள்ளது.

New update of Surya starrer directed by Siva

2000 ராஜபாளைய நாய்கள்.. 1000 மாம்பா பாம்புகளுடன் ஹீரோவாகும் டைரக்டர் வடிவுடையான்

2000 ராஜபாளைய நாய்கள்.. 1000 மாம்பா பாம்புகளுடன் ஹீரோவாகும் டைரக்டர் வடிவுடையான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள படம் ‘பாம்பாட்டம்’.

இந்தப் படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.

‘பாம்பாட்டம்’ படத்தின் இணை தயாரிப்பாளரான பண்ணை A.இளங்கோவன் தனது பண்ணை பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் ‘நாக பைரவா ‘ படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்க உள்ளதோடு நாயகனாகவும் அறிமுகமாகிறார்.

பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜூலை 1 முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் நம்மிடையே பகிர்ந்தவை…

1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.

2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த நாக பைரவ உருவாக இருக்கிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் பிரம்மாண்டமாக வர வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்றார் இயக்குனர் V.C.வடிவுடையான்.

Director Vadivudaiyan turns hero

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே..; கமலிடம் முத்தமழை பெற்ற ரோபோ சங்கர்

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே..; கமலிடம் முத்தமழை பெற்ற ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் இருந்தாலும் சினிமாவில் அவருக்கு முத்த நாயகன் என்ற மற்றொரு பட்டப்பெயர் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிக்கும் அழகான ஹீரோயின்களுக்கு அவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுப்பார்.

ஆங்கிலப் படத்துக்கு நிகராக அவருடைய படங்களில் முத்த காட்சிகள் இடம்பெறுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்களில் முத்தக் காட்சிகள் இடம்பெறுவது குறைந்து வருகிறது.

இந்த வரிசையில் நடிகர் விஜய்சேதுபதி அதுபோல் முத்த மழை பொழிந்து வருகிறார். ஆனால் அவர் நடிகைக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது இல்லை.

ஆனால் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு ரசிகர்களுக்கும் மற்ற பிரபலங்களுக்கும் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கருக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அது பற்றி விவரம் வருமாறு

நடிகர் ரோபோ ஷங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர்.

இவர் வருடந்தோறும் கமலஹாசன் பிறந்தநாள் வந்துவிட்டால் முதல் வேலையாக அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்வது அவரது வழக்கம்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜூன் 3ல் ‘விக்ரம்’ படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளுக்கு நேரில் சென்று கமலஹாசன் என்ட்ரியின் போது ஆரத்தி எடுத்து தடபுடலாக கொண்டாடிய ரோபோ ஷங்கரை இன்று நேரில் அழைத்து சந்தித்தார் கமல்ஹாசன்.

குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர் ஆண்டவரிடம் அன்பாக முத்தத்தைக் கேக்க அவரும் கன்னத்தில் முத்தத்தைக் கொடுக்க திக்கு முக்காடிப் போன ரோபோ ஷங்கர் உற்சாகத்தில் இருக்கிறார்.

Kamal Haasan kisses Robo Shankar

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ராணா – ரக்ஷிதா இணையும் ஏக் லவ் யா

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ராணா – ரக்ஷிதா இணையும் ஏக் லவ் யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 கோடி வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்ஷன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு.

எனவே, எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. அதிலும் காதலோடு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப திரில்லரோடு வெளியான காதல் படங்களுக்கு வெற்றி உறுதி.

அப்படி ஒரு படம் தான் ஏக் லவ் யா.

ரக்ஷிதா பிலிம் பேக்டரி சார்பில் ரக்ஷிதா பிரேம் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம்.எஸ் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோவாக புதுமுக நடிகர் ராணா நடித்துள்ளார். ஹீரோயினாக ரச்சிதா ராம் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரன்ராஜ் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா நானய்யா, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி, ஹீரோவின் முன்னாள் காதலி சில மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதற்கிடையே இந்த கற்பழிப்புக்கு ஹீரோ தான் காரணம் என்று கூறி அவர் மீது பழி போடுகிறார்கள்.

நிரபராதியன ஹீரோ தன் மீது விழுந்த பழியை துடைப்பததோடு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர மிகப்பெரிய வக்கீலை எதிர்த்து போராடுகிறார்.

இத்தகைய போராட்டத்தில் ஹீரோ எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதோடு, இளைஞர்கள் காதலில் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும், உண்மையான காதல் பற்றியும் அழுத்தமாக சொல்லி காதலர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் கன்னட பதிப்பு ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஏக் லவ் யா தமிழ் மற்றும் மலையாள பதிப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏக் லவ் யா படத்தின் தமிழ் மற்றும் மலையாள பதிப்பை இவானியா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிலிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அபிலாஷ் நந்தகுமார் மற்றும் பிரசாத் கிருஷ்ணா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்கள்.

அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேன் சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீநிவாஸ் பி.பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.

Rana-Rakshita joins for Ek Love Ya

சிந்தித்தேன் எழுதுகிறேன்.: அழகிய தேவதை நயன்தாரா ஸ்பெஷல்.; காதலில் வென்றது எப்படி.?

சிந்தித்தேன் எழுதுகிறேன்.: அழகிய தேவதை நயன்தாரா ஸ்பெஷல்.; காதலில் வென்றது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிந்தித்தேன் எழுதுகிறேன்…

தலைப்பே சும்மா அதிருதில்ல அப்படின்னு நினைக்கும்போதே பக்கத்துல இருந்து ஒரு குரல் எல்லாரும் சிந்திச்சுதான் எழுதுவார்கள் அப்படின்னு சொல்ல..

ஆமால்ல மொக்க வாங்கிட்டோமே அப்படின்னு தோணிச்சு. சரி விஷயத்துக்கு வருவோம். அது இதுன்னு எந்த வரைமுறையும் இல்லை.

சம கால நிகழ்வுகள், மனிதர்கள், சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த ஒரு அலசல்.

சரி முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு சிந்திக்கும்போதே (அப்பாடி தலைப்பை justify பண்ணியாச்சு) எல்லா மீடியாலயும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாணம்தான் ஹைலைட்… தமிழ் கூறு நல்லுலகம் நம்மள கைவிடாதுங்கற நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்.

சரி நயன்தாரா பேருக்கு என்ன அர்த்தம்ன்னு கூகுள் ஆண்டவர்கிட்ட search பண்ணினால் 2 மீனிங் அந்தம்மாவுக்கு எப்படி சூட் ஆகுது பாருங்க… ஒண்ணு அழகிய தேவதை இன்னொன்னு a light for one’s life…

மொதல் விஷயம் தெரிஞ்சது தான் ரெண்டாவது விஷயம் ஒருவரது வாழ்க்கையில் வெளிச்சம் கொடுப்பவர் அவருக்கு பொருந்துதா என்பதை விரிவாக பார்ப்போம்..

நயன்தாராவுக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் திருவல்லா… இந்திராகாந்தியின் பிறந்த தேதியை ஒட்டி பிறந்தவர் நயன் (நவம்பர் 18.)

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

அப்ப மனவலிமையும், மனிதத்தன்மையும் கலந்துதானே இருக்கும். அது ரெண்டும் தான் நயன்தாராவை வாழ்க்கை பூரா வழிநடத்துது.

நாம இவங்கள பத்தி பேசுறதுக்கு காரணம் சினிமா நடிகைன்றதால மட்டுமில்ல. தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் மிக திடமாக முடிவெடுத்து வெற்றி கண்டவர்.

மிக மென்மையான மனதுக்கு சொந்தக்காரர்… எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர் காதல் வயப்படுதல் உட்பட….

முதல் காதல் சிம்புவுடன் சரியான வயதில்… நயன்தாரா சிம்பு மீது உயிரையே வைத்திருந்தார். ‘வல்லவன்’ படத்துக்கு அவர் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பே அவர் சிம்பு மீது வைத்திருந்த காதலுக்கு சாட்சி.

ஆனால் இவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதும் நொருங்கிவிட்டார். சிம்பு மேல் எழுந்த சந்தேகம் அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால் காதலியாக இருந்தவரை சிம்பு தன் திரை வாழ்வில் உயர்வதற்கு தனது பங்களிப்பை ஒரு காதலியாக நேர்மையாக கொடுத்தார். அவர் வாழ்விற்கு ஒளியாக இருப்பதற்கான முயற்சி எடுத்தார். ஆனால் அது கைகூடவில்லை.

இளகிய மனதிற்கு சொந்தக்காரியான நயன்தாராவை மிக எளிதாக தனது காதல் வலையில் வீழ்த்தி விடுகிறார் பிரபுதேவா.

இந்த காதலிலும் காதலன் உயர்வுக்கு பக்கபலமாக இருக்கிறார். நயன்தாராவால் பிரபுதேவாவுக்கு சில பட வாய்ப்புகள் இயக்குவதற்கு கிடைக்கின்றன.

காதலில் நேர்மை என்பது நயன்தாராவின் கொள்கை. அது போல் தன் காதலன் தன்னிடம் மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நியாயம் தானே.

பிரபுதேவா மேல் தான் கொண்ட காதலுக்காக இந்துவாக மதம் மாறினார். பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.

காதலிக்க தொடங்கும்போதே முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்திருந்த பிரபுதேவா அதை மீறும்போது அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதாக நம்பினார்.

அந்தக் காதலும் முடிவுக்கு வந்தது. காதலித்த வரை அவருக்கும் வெளிச்சமாக திகழ்ந்தார்.

எந்த பெரிய பின்புலமும் இல்லாத கதை சொல்ல வந்த விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதல். அதே அன்பு, அதே உயர்வு, அதே வெளிச்சம் விக்னேஷ் சிவனுக்கும் கிடைத்தது.

இருவரும் காதலில் காட்டிய நேர்மை திருமணமாக உயர்ந்தது. இருவரும் சீரோடும், சிறப்போடும் வாழ நாமும் வாழ்த்துவோம்.

மேற்கண்ட அனைத்து காதலிலும் நயன்தாரா சாதாரண பெண்ணாக நேர்மையுடன் நடந்து கொண்டார். அந்த நேர்மை அவரது காதலை வெற்றி பெற செய்தது.

இனியும் தொடரும்… மீண்டும் சந்திப்போம்.

(நன்றி : ராமராஜன்)

Ramarajan

Actress Nayantharas love and life review

யோகிபாபு படத்தை தயாரித்து இயக்கும் சந்தானம் பட டைரக்டர்.; டைட்டில் வேற லெவல்

யோகிபாபு படத்தை தயாரித்து இயக்கும் சந்தானம் பட டைரக்டர்.; டைட்டில் வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.

காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான சந்தானம் நடித்த “ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழுவினராக இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் – தமிழ்குமரன், கலை இயக்கம் – ராஜா A, பாடல்கள் – ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை – கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது.

இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Yogi babu joins with Santhanam’s A1 hit director

More Articles
Follows