தனுஷ்–சசிகுமார் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு

New title logo will be release for ENPT on 20th July 2018கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

நீ….ளமான படம் போல நீண்ட நாட்களாக உருவாகுகிறது. பின்னர் நிற்கிறது. பின்னர் தொடங்குகிறது.

கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கின்றனர்.

முதன்முறையாக கவுதம் மேனன் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை முன்பே வெளியிட்டு விட்டனர். இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, ராணா டகுபதி, சுனைனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இதன் கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் – சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர்.

இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் புதிய டைட்டில் லோகோவை வருகிற ஜூலை 20-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

New title logo will be release for ENPT on 20th July 2018

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை,…
...Read More

Latest Post