யோகி பாபுக்கு அடித்த யோகம்; நயன்தாரா சிபாரிசு..!

யோகி பாபுக்கு அடித்த யோகம்; நயன்தாரா சிபாரிசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara and yogi babu‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அறம் படத்தை தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் தன்னுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடி கதாபாத்திரம் ஏற்ற யோகிபாபுவின் நடிப்பு பெரிதாக ஈர்த்ததால் இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் அளிக்க வேண்டும் என படக்குழுவிடம் அவருக்கு சிபாரிசு செய்து நடிக்க வைக்கிறார், நயன்தாரா.

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் 2 கேரக்டர்கள் குணாதியசங்கள்

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் 2 கேரக்டர்கள் குணாதியசங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam ajithசிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தில் இரண்டு கேரக்டர்களில் அஜித் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்தின் இரண்டு கேரக்டரில் ஒருவர் சாந்தமான அஜித்தாகவும் மற்றொருவர் கோபக்கார இளைஞராகவும் வருகிறார்.

சாந்தமான கேரக்டர் அஜித் தாடியில்லாமல் இருப்பாராம்.

இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினி படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவின் படம் வெளியானது

ரஜினி படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவின் படம் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simh at rajini 165சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் சூட்டிங்குக்காக மேற்கு வங்க மாநில டார்ஜிலிங்கில் ஒரு மாதம் தங்கவுள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றர்.

இந்நிலையில் இதன் சூட்டிங்கில் உள்ள பாபி சிம்ஹாவின் போட்டோ ஒன்று தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சூட்டிங்குக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் இதுபோன்ற படங்கள் வெளியாவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக ரசிகர்களுக்கு ரம்ஜான் ட்ரீட் கொடுத்த துல்கர் சல்மான்

தமிழக ரசிகர்களுக்கு ரம்ஜான் ட்ரீட் கொடுத்த துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dulquer Salmaans next in Tamil movie titled Vaanரா.கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

‘வான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய தீனதயாளன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார்.

விரைவில் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகவுள்ளது.

Dulquer Salmaans next in Tamil movie titled Vaan

vaan

பேராசிரியராக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ஸ்வீட் நடிகை.?

பேராசிரியராக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ஸ்வீட் நடிகை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Agarwal to pair with Rajini in Karthik Subbaraj movieகாலா படத்தின் வெற்றியில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஜினி.

இப்படத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு கிடைத்திருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக டார்ஜிலிங்கில் தங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.

அங்கு ஒரு மாதம் சூட்டிங்கை முடித்துவிட்டே சென்னை திரும்புவேன் என தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் ரஜினி கொஞ்சம் இளமையான தோற்றத்தில் நடிப்பதாகவும் அது கல்லூரி பேராசிரியர் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் டூயட் பாடிய காஜல் அகர்வால் தான் அந்த நாயகி என கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Kajal Agarwal to pair with Rajini in Karthik Subbaraj movie

kajal agarwal

த்ரில்லர் படத்திற்காக பரத் நிவாஸை இயக்கும் நடிகர் ஷரண்குமார்

த்ரில்லர் படத்திற்காக பரத் நிவாஸை இயக்கும் நடிகர் ஷரண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Bharath upcoming project Direction by Actor Sharranபிரபல இயக்குனர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காத ஷரண் குமார் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

உதவி இயக்குனராக இல்லா விட்டாலும், அதற்கு மாறாக பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் இவர்.

தற்போது பரத் நிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

“நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள்.

மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன்.

அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்” என்றார் நடிகர் ஷரண்.

ஷரண் ஓரிரண்டு குறும்படங்கள் இயக்கியதும், அதில் ‘டீ ஆர் காஃபி’ குறும்படம் நல்ல வரவேற்பை, பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டார்க் திரில்லர் தான் இயக்கும் முதல் படம் என்று கூறும் ஷரண் மேலும் கூறும்போது, “பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை.

இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் இசையமைக்க, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சன்னி (எடிட்டர்), கார்க்கி (பாடல்கள்), சாய்ராம் கிருஷ்ணன் (நிர்வாக தயாரிப்பு) கருந்தேள் ராஜேஷ் (திரைக்கதை ஆலோசகர் – சூது கவ்வும், இன்று நேற்று நாளை புகழ்) ஆகியோரும் படத்தில் பணி புரிகிறார்கள்.

படத்தின் கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால் கொடைக்கானலில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கிறார்.

Actor Bharath upcoming project Direction by Actor Sharran

More Articles
Follows