மீண்டும் நயன்தாராவுடன் இணையும் சிவகார்த்திகேயன் & ராஜேஷ்.?

rajesh nayantharaபொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிப்பார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவாகார்த்திகேயன்.

இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என தகவல்கள் வந்தன.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா.

அதுபோல் ராஜேஷ் இயக்கிய பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara again team up with Sivakarthikeyan and Rajesh

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…
...Read More
`வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும்…
...Read More

Latest Post