தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தும் ‘நாற்கரப்போர்’.; நம்பிக்கையுடன் ‘கபாலி’ லிங்கேஷ்

தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தும் ‘நாற்கரப்போர்’.; நம்பிக்கையுடன் ‘கபாலி’ லிங்கேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர்.

இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள்.

தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்க , கதையின் நாயகனாக லிங்கேஷ் நடித்து வருகிறார்.

‘நாற்கரப்போர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை.

தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம்

நாற்கரப்போர் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.

இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்” என்கிறார் லிங்கேஷ்.

‘Naarkarappor’ which resonates in Tamil cinema

மீண்டும் ‘சவரக்கத்தி’ கூட்டணி.; முதன்முறையாக இசையமைத்து நடிக்கும் மிஷ்கின்

மீண்டும் ‘சவரக்கத்தி’ கூட்டணி.; முதன்முறையாக இசையமைத்து நடிக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’.

இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர்.

மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

சவரக்கத்தி விமர்சனம்

வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக “டெவில்” மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது.

தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கூடுதல் தகவல்..:

கடந்த 2018 பிப்ரவரியில் ரிலீசான ‘சவரக்கத்தி’ படத்தை ஜி ஆர் ஆதித்யா இயக்க, மிஸ்கின், ராம் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்து இருந்தனர்.

‘Savarakathi’ combo again . Misskin, who is composing and acting for the first time

பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மாதவன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி’.

இந்த ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது

அப்போது மாதவன் பேசியதாவது..

”அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றனர்.

ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்த பஞ்சாங்கம் மூலம் கணித்து மற்ற கிரகங்களை எல்லாம் தட்டி நேரடியாக அனுப்பினர்.

நம்பி நாராயணின் மருமகன் அருணண் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி கதை : ‘ராக்கெட்ரி’ படமெடுக்க மாதவன் பட்ட ரணங்கள்

அவர், பஞ்சாங்க முறை வானியல் வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பினார்.

அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது. சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான்” என பேசினார் மாதவன்.

மாதவனின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பொருளானது.

ஒரு சிலர் மாதவனுக்கு ஆதரவாக பேசினாலும் பலர் மாதவனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். பஞ்சாங்கம் வேறு விஞ்ஞானம் வேறு என ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிலையில் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில்… “அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன்.

அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது.

அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்.” என பதிவிட்டுள்ளார்.

Madhavan controversy speech at Rocketry press meet

சிவாஜிராவ் வாழ்க்கையை திருப்பி போட்டு ரஜினியை நடிகனாக மாற்றிய முதல் தருணம்

சிவாஜிராவ் வாழ்க்கையை திருப்பி போட்டு ரஜினியை நடிகனாக மாற்றிய முதல் தருணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூன் 26-ஆம் தேதியை நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக பேசிய ஒய் ஜி மகேந்திரா கூறியது பின்வருமாறு:

“உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன்.

அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

என்னை கட்டிப்பிடித்த அவர், இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார்.

அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்த்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள்.

ஜூன் 26 அன்று ஒட்டுமொத்த குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவராக ரஜினிகாந்த் பாராட்டினார். மேலும் அவரது நாடக அனுபவங்களை பற்றி கூறினார்.

“ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்,” என்று ரஜினி தெரிவித்தார்.

ஒத்திகையில் அவரது நடிப்பை கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நடத்தில் துரியதோணனாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையியை திசை திருப்பியது என்று அவர் கூறினார். அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாக கூறினார்.

(ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் என்பது குறிப்பிடத்தக்கது.)

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக எங்களிடம் பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்.”

இவ்வாறு ஒய் ஜி மகேந்திரா கூறினார்.

That moment Sivaji Rao’s transformation to Rajinikanth

இளையராஜாவின் A Beautiful Breakup படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வானது

இளையராஜாவின் A Beautiful Breakup படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது.

உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசைமேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும்.

இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, “எ பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்.

“இசைஞானியின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள்.

எனவே, இசைஞானியின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்மூலம், 12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது.

மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

A Beautiful Breakup is to screen on film festival

BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு அடித்தளமான நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராம்.
இவரின் நாடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.
இவரின் நாடகங்களை அறிந்து கொண்ட நடிகர் கமலஹாசன் ‘அன்பே சிவம்’ படத்தில் நாசருக்கு எதிராக வீதி நாடகங்களை போடுபவராக நடித்திருந்தார்.
அந்த காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தவர் ராமு தான்.
இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பூ’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ராம். அதன் பின்னர் இவரின் பெயருக்கு முன்னே பூ என்ற எழுத்தை சேர்த்து பூ ராம் என அழைக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் அப்பாவாக நடித்து இருந்த ராமு அவர்கள் “பூ ராமு” என்கிற அடையாளத்தை பெற்றார். “பூ” படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் (தமிழ் ஊடகங்கள் விருது) என்கிற விருதும் ராமு அவர்களுக்கு கிடைத்தது.
தங்க மீன்கள் படத்தில் கல்யாணி என்கிற மகனுக்கு ராமு அப்பாவாக நடித்து இருந்தார். “பூ” படத்தில் பேனா காரராக தொழிலாளியாக நடித்திருந்த “ராமு” இந்தப்படத்தில் நல்லாசிரியர் விருது வென்ற ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.
சீனு ராமசாமி இயக்கிய “நீர்ப் பறவை” படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் வசந்த் என்கிற பொறியியல் கல்லூரி மாணவனுக்கு, கிராமப்புறத்தில் வாழும் ஒரு அப்பாவாக நடித்து இருப்பார் ராமு.
இதில் கல்லூரி முதல்வர் சத்யராஜ் உங்கள் மகன் “கோழி மேய்ப்பதற்கு தான் லாய்க்கு..” என்று சொல்லிவிட  ராமு உடைந்து அழும் இடம் அவ்வளவு வலிகள் நிறைந்ததாக இருக்கும்.
இயக்குனர் ராமின் பேரன்பு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்வார். மனநல வளர்ச்சி இல்லாத மகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து இருப்பார். “தான் வளர்ந்த விதத்தை சொல்லும் இடம் நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய காட்சியில் நடித்து இருப்பார்.
இதைத்தொடர்ந்து “நெடுநல்வாடை” என்கிற சின்ன படத்தில் தாத்தாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் உயிரே நடிகர் ராமு தான் .
இந்த நெடுநல்வாடை” படத்தின் போஸ்டர்களில் கூட ஹீரோ ஹீரோயின்களின் படங்களை விட ராமு  படத்தை தான் முதன்மையாகவும், பெரிதாகவும் போட்டு விளம்பரப்படுத்தினர்.
சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார்.
இவர் நடித்த பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை , சூரரைப்போற்று போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகும்.
தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில்  நடித்து இருந்தாலும் மீண்டும் பழையபடி தன்னுடைய பயணத்தை வீதி நாடகங்கள் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இன்றும் கூட தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் பூ ராமு.
இந்த நிலையில் இன்று ஜூன் 27 காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
More Articles
Follows