இஸ்ரோ விஞ்ஞானி நம்பி கதை : ‘ராக்கெட்ரி’ படமெடுக்க மாதவன் பட்ட ரணங்கள்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி கதை : ‘ராக்கெட்ரி’ படமெடுக்க மாதவன் பட்ட ரணங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட  இந்த திரைப்படம்… ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஆர். மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து ‘ராக்கெட்ரி’. படத்தை உருவாக்கியது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நடிகர் மற்றும் இயக்குநர் மாதவன் கூறியதாவது..
விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து  வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.
ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன்.
அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார்,
நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்.” என கூறினேன். ஆனால் அவர், “ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல்துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான்.
ஆனால் நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் ‘ஸ்பை’ என குறியிடப்பட்டிருப்பதை காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது. அது தான் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக ஏற்படுத்தியது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு, எனது திரைக்கதையோடு அவரைச் சந்திக்க நான் சென்றேன். அப்போது  அவருடைய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலினால் நான் ஆச்சர்யமடைந்தேன். அவர் தனது சாதனைகளைப் பற்றி பேச ஆரம்பிதார்.
அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில், அவர் பேசும் போது நான் குறுக்கிட்டு, “சார், இது எல்லாம் உண்மையா?” என்று கேட்டேன். அவர், “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என கேட்டார்.
நான் அவரிடம் ஒரு ஏமாற்றத்துடன் கேட்டேன், “நான் ஏழு மாதங்கள் உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை எழுதினேன், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை.” . அவர் அதற்கு ஒரு பதிலைக் கொடுத்தார், “நான் அசாதாரணமான எதையும் செய்யவில்லை. நான் வேலை செய்து சம்பளம் வாங்கினேன். “ என்று சாதாரணமாக கூறிவிட்டார்.
நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள்.  ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார், பரப்புகிறார், ஆனால்  மற்றவர் – எழுதப்படாத மற்றும் யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்கள். நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்.
நடிகர் மாதவன் திரைப்படத்தில் வரும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்காக  தனது உடலில் உருவாக்கிய மாற்றத்தின் சில படங்கள் மற்றும் காட்சிகளை திரையிட்டு, ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர் கூட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.
அவர் வயதான தோற்றத்தை பெறுவதற்காக தனது பற்களை மறுசீரமைத்தார், மேலும் அவர் அந்த தோற்றத்திற்காக தொப்பை வரவைத்து காட்சிகளை எடுத்ததை பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும், வெறும் 14 நாட்களில் அவர் உடல் எடையைக் குறைத்து புத்துணர்ச்சி அடைந்ததைக் காட்டும் படத்தை காண்பித்து,  கூட்டத்தினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.
‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து ஆர்.மாதவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் உறுதியான போராட்டம், மற்றும் வெற்றியின் கதையை படம்பிடித்து காட்டும்,  “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்”, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.
ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.
பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், TriColour films, Varghese Moolan Pictures  மற்றும் 27th Investments  நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை இந்தியாவில் UFO Moviez மற்றும் Red Giant Movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து  விநியோகம் செய்கின்றன.  Yash Raj Films மற்றும் Phars Film Co மூலம் இத்திரைப்படம் சர்வதேச அளவில் விநியோகிக்கப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி வாழ்க்கைல விசேஷம்.; விஜய்-க்கு பான் இந்தியா கதை ரெடி.!

ஆர்.ஜே.பாலாஜி வாழ்க்கைல விசேஷம்.; விஜய்-க்கு பான் இந்தியா கதை ரெடி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர்   Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜி படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில்
RJ பாலாஜி கூறியதாவது…
“வீட்டுல விஷேசம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் பற்றி பலரும் பல விதமாக கூறிகொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன்.  இருந்தாலும் எங்களது முந்தைய படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது.
இந்த படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒரு படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என நாங்கள் உறுதியாய் கூறுகிறோம். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை, கமர்சியல் மசாலா படங்களில் இருக்கும் அம்சங்கள் இந்த படத்தில் இல்லை.
இருந்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம். கொரோனாவிற்கு பிறகு, மக்கள் பெரிய நடிகர்கள் நடித்த படத்திற்கு மட்டுமே திரையரங்கிற்கு வருவார்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் இந்த கதையின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்.
இந்த படத்தை அதற்குண்டான ரசிகர்களிடம்  கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்து வேலை பார்த்தோம். Romeo Pictures  ராகுல், இந்த படத்தை லாபகரமான படமாக மாற்றுவதற்கு எல்லாவிதமான பணிகளையும் சிறப்பாக செய்தார். ஒரு கடைநிலை ஊழியர் போல் இந்த படத்தில் பணியாற்றினார். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் கடுமையாக உழைத்தார்.
சமீபத்தில் விஜய் சாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் பான் இந்திய கதை ஒன்றை கூறினேன். அவர் கதையை கேட்டு, இதை திரைக்கதையாக உருவாக்க எவ்வளவு நாள் ஆகும் என கேட்டார். நான் ஒரு வருடம் ஆகும் என கூறினேன். அவரும் என்னை திரைக்கதையை உருவாக்க அவ்வளவு நாளாகுமா? எனக்கேட்டார்.
ஒரு படத்தை வேகமாக உருவாக்குவதை விட, அதை சிறப்பாக மாற்றுவதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்று  நான் விரும்புவேன். அதை நோக்கியே பயணிப்பேன் என்றேன். விஜய் படம் கண்டிப்பாக செய்வேன், இந்த படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் எங்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது.
எங்களுக்கு ஆதரவு அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு எங்களது படக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் NJ சரவணன் கூறியதாவது…
இது போன்ற கதைகளை மக்களுக்கு கூற வேண்டும் என்று விருப்பப்பட்டு இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் இந்த படத்திற்கு கொடுத்த பெரிய வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் நினைத்ததை தாண்டி இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு அளித்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் படக்குழு சார்பாக நன்றியை கூறிகொள்கிறோம்.
வீட்ல  விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
‘மிடில் கிளாஸ்’ வரிசையில் முனீஷ்காந்த் – விஜயலட்சுமி – ராதாரவி

‘மிடில் கிளாஸ்’ வரிசையில் முனீஷ்காந்த் – விஜயலட்சுமி – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory  தயாரிப்பாளர் G.டில்லி பாபு. அவரது தயாரிப்பில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறியது.
இந்த நிலையில், அடுத்ததாக “கள்வன், மிரள்” போன்ற பல நம்பிக்கைக்குரிய படங்களை தயாரித்து வருவது, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து பல பெரிய அறிவிப்புகள் வரவிருக்கும் நிலையில், இத்தயாரிப்பு நிறுவனம் தற்போது அதன் அடுத்த படைப்பாக ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் முனிஷ்காந்த் நாயகனாக நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27, 2022 அன்று தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மிடில் கிளாஸ் திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகிறது.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்குகிறார்.
தொழில்நுட்பக் குழுவில் சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), MSP மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (எடிட்டிங்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்),K.Poornesh (Executive Producer), SS.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு), J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (மேக்கப்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), KV துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).
சினிமா தியேட்டரில் பெருமாளுக்கு பேனர் வைத்த ‘மாயோன்’.; பார்வையற்றவர்களுக்கு இலவச காட்சி

சினிமா தியேட்டரில் பெருமாளுக்கு பேனர் வைத்த ‘மாயோன்’.; பார்வையற்றவர்களுக்கு இலவச காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார். என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
ஆன்மீகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் பார்வையற்றவர்களுக்காக பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் டீஸர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக மாயோன் ரதம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இந்த ரதம் பயணித்து வருகிறது. இதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்காக சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நாளை ஜூன் 24 காலை 8 மணிக்கு பார்வையாளர்களுக்காக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படத்தை திரையிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கும் மாயோன் படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும். மேலும் இந்த படத்திற்காக திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக பெருமாளுக்கு மிகப்பெரிய பேனர் சென்னை ரோகினி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சைகோ திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக பாணியில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட்பிரபு – நாகசைதன்யா – கீர்த்திஷெட்டி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

வெங்கட்பிரபு – நாகசைதன்யா – கீர்த்திஷெட்டி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில்,  வித்தியாசமான பரிமாணத்தில்   கதைகளை உருவாக்குவதில் வல்லவர்.
அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும்  ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் உருவாகும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது,
இதனையொட்டி தயாரிப்பாளர்கள் நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்த, பெரும் உற்சாகமான இரண்டு அறிவிப்புகளை தந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிப்பின் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால், தென்னிந்திய திரைத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை வரவேற்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்  உற்சாகத்தில் உள்ளது.
வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா  கூட்டணியில் ஒரு திரைப்படம்  முன்னதாகவே நடக்க இருந்தது. ஆனால் இருவரும் அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற ஒரு சரியான திரைப்படத்திற்காக காத்திருந்தனர்.
தற்போது இந்த கூட்டணி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் பிரமாண்டமாக இணைந்துள்ளது.
இப்படம் வெங்கட் பிரபுவின் டிரேட்மார்க் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த அட்டகாசமான  கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.
தவிர, நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள அனைவரையும் கவரும் ஒரு அழகான பாத்திரத்தில் தோன்றவுள்ளார்.
இந்த திரைப்படத்தில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தை பற்றி  வரவிருக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகள் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கும்.
Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட் தூரி, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்படி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
தற்போது, அவர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தைத் தயாரித்து வருகிறார். பவன் குமார் வழங்கும் இப்படத்தை  இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.
இப்படம் ஜூலை 14, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் ராம் பொதினேனி மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குனர் போயபதி ஸ்ரீனு (அகண்டா புகழ்) கூட்டணியில் மற்றுமொரு அட்டகாசமான திரைப்படத்தை இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ளது குறிப்பிடதக்கது.
இத்திரைப்படம் இயக்குநராக வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகும், டோலிவுட்டில் அவர் இயக்குநராக  அறிமுகமாகும் முதல் படம். தெலுங்கு திரையுலகின் யூத் ஐகான் நாக சைதன்யா இந்த திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடதக்கது.
பனியன் கம்பெனி படமாகிறது.; பாலமுருகன் – அம்மு அபிராமி இணையும் ‘குதூகலம்’

பனியன் கம்பெனி படமாகிறது.; பாலமுருகன் – அம்மு அபிராமி இணையும் ‘குதூகலம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதார்த்தமான வாழ்க்கை…
நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும்.
அந்த வகையில் ‘அங்காடித்தெரு’,
சமீபத்தில் ‘அசுரன்’ போன்ற   படங்களை மக்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் இப்போது,
திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது.
இப்படத்திற்கு “குதூகலம்” என்று பெயரிட்டுள்ளார்கள்.  இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் (Rat & Cat Pictures)
சார்பில் M.சுகின்பாபு முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த யதார்த்தமான கதையை உருவாக்கி, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். உலகநாதன் சந்திரசேகரன்.
துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிசட்டை’,
‘எதிர்நீச்சல்’ படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷ் நடித்த ‘கொடி’, ‘பட்டாசு’ போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதே இந்த கதை.
இதை திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் உருவாக்குகிறார் டைரக்டர்.
இதன் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார்.
இவர்களுடன் கவிதாபாரதி, ‘விஜய் டிவி’ புகழ், பியான், சஞ்சீவி, ‘நக்கலைட்’ யூ-ட்யூப் புகழ் அனிஸ், மன்மோகித், ‘மெட்டி’ பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுகிறது.
இசை  :  பியான் சர்ராவ்
ஒளிப்பதிவு  :  மணி பெருமாள்
       (கும்கி சுகுமார்உதவியாளர்)
எடிட்டர் : பிரகாஷ் மப்பு
               (கொடி, பட்டாசு)
ஆர்ட்: L.கோபி – அறிமுகம் (ஆர்ட் டைரக்டர் துரைராஜ் உதவியாளர்)
ஸ்டண்ட் : டேஞ்சர் மணி
PRO: ஜான்சன்
நிறுவனம் : ரெட் & கேட் பிச்சர்ஸ்
தயாரிப்பாளர் : எம்.சுகின்பாபு
More Articles
Follows