நீங்கள் உண்மையாக தேடி அலைவது உங்களைத் தேடி வந்தடையும்..; ‘மாநாடு’ வெற்றி குறித்து யுவன்

நீங்கள் உண்மையாக தேடி அலைவது உங்களைத் தேடி வந்தடையும்..; ‘மாநாடு’ வெற்றி குறித்து யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன.

ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை.

ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் BGM இல் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக, உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.

எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம், படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார்.

மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற, ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

“நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் ” என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது.

மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்…

யுவன் சங்கர் ராஜா

Music Director Yuvan about Maanaadu success

விஜய்யின் ‘பிகில்’ சின்னப்படம் தான்..; புரொடியூசர் கே ராஜன் கொடுத்த ஷாக்கிங் அப்டேட்

விஜய்யின் ‘பிகில்’ சின்னப்படம் தான்..; புரொடியூசர் கே ராஜன் கொடுத்த ஷாக்கிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் ஆரி பேசும்போது,

“ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு நல்ல துவக்கம் இருக்கும். இந்தவிழாவில் முதலில் தயாரிப்பாளரை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள், அது நல்ல ஆரம்பம். ஏனென்றால் தயாரிப்பாளர் தான் எல்லாம். சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன்.

பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வரக்காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது.

மானஸ்வி குழந்தையை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை.

இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல… இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமனும் நானும் ஒரே பிரச்சினையை சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022-ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமையவேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். “நீங்கள் வந்தால் கலை கட்டும்” என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.

தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள்.

உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள். எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்… என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். பிகில் தயாரிப்பாளர் இப்போ எங்கே இருக்கார்.?

தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும்.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா?

அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது,

“கண்மணி பாப்பா படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நல்லாருந்தது. ரொம்ப குவாலிட்டியா பண்ணிருந்தாங்க. இயக்குநர் திறமையாக எடுத்திருந்தார். தமன் நன்றாக நடித்திருந்தார். குட்டிப்பெண் மானஸ்வி சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் நன்றாக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

ஹீரோ தமன் பேசும்போது,

“இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம் இது. ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். இந்தப்படம் மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

இசை அமைப்பாளர் சாய் தேவ் பேசும்போது,

இது எனக்கு முக்கியமான நாள். நான் நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் இது எனக்கு மிக முக்கியமான படம். இந்தப்படத்தில் நான் இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. எக்ஸிகியூட்டிவ் புரோடியூசரும் கூட. இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகவும் நன்றி. இயக்குநர் பெரிய ஹார்ட்வொர்க்கர். அவருக்கு இந்தப்படம் ரொம்ப முக்கியம். ஹீரோ தமன் எங்கள் பேமிலியாகி விட்டார். மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் ஸ்ரீமணி பேசும்போது,

“இறைவனுக்கு நன்றி. மழை மற்றும் டிராபிக் எல்லாவற்றையும் தாண்டி கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லோரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி” என்றார்.

Producer K Rajan’s controversial speech about movie Bigil

மீண்டும் லோகேஷ்-அட்லி என அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய்

மீண்டும் லோகேஷ்-அட்லி என அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் விஜய்.

ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்களே வெறுத்துப் போன நிலையில் தன் இயக்குனரை மாற்றினார்.

அதன்பின்னர் ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் இயக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதன்பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் விஜய்.

இதன்பிறகு மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாரம் விஜய். இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

ஷாரூக்கான் நயன்தாரா நடித்து வரும் லயன் படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay’s upcoming films with his favourite directors

‘பேச்சுலர்’ நாயகியுடன் ‘பிக்பாஸ்’ முகேன் சூடான குளியல்..; ஓ இதான் ‘மதில் மேல் காதல்’.?

‘பேச்சுலர்’ நாயகியுடன் ‘பிக்பாஸ்’ முகேன் சூடான குளியல்..; ஓ இதான் ‘மதில் மேல் காதல்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகேன்.

இவர் நாயகனாக ‘வேலன்’ என்ற படத்தில்/ நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முகேன் ராவ் உடன் ‘பேச்சுலர்’ பட நாயகி திவ்ய பாரதி ஜோடியாக இணைந்துள்ளார்.

இவர்களுடன் சாக்க்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, KPY பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ‘மதில் மேல் காதல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சனா அலிகான் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

காதலின் உறவை தக்க வைத்துக்கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதே இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் & திவ்ய பாரதி இருவரும் நெருக்கமாக நுரை தளும்ப தளும்ப குளியல் போட்டப்படி உள்ளனர்.

Bigg Boss Mugen and Divya Bharti joins for romantic film

கொரோனா பாதித்த கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்.? டிஸ்சார்ஜ் எப்போ.?

கொரோனா பாதித்த கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்.? டிஸ்சார்ஜ் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில்

அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹசான் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்தார்.

அதன்படி (சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா) மருத்துவமனையில் சிகிச்சைச்சாக அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

கமல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Health update of MNM Leader Kamal Haasan

‘த்ருஷ்யம் 2’ தந்த உற்சாகத்தால் மீண்டும் நடிப்பில் ஆர்வமான சுஜா வருணி

‘த்ருஷ்யம் 2’ தந்த உற்சாகத்தால் மீண்டும் நடிப்பில் ஆர்வமான சுஜா வருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘த்ருஷ்யம் 2’. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி. அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், ‘சுசீஸ் ஃபன்’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார்.

‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

Suja Varunee talks about her telugu film Drishyam 2

More Articles
Follows