மீண்டும் விஜய்-அஜித்தை இணைக்க முயற்சி; இயக்குனரின் கனவு பலிக்குமா..?

மீண்டும் விஜய்-அஜித்தை இணைக்க முயற்சி; இயக்குனரின் கனவு பலிக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mohan rajaரஜினி-கமலுக்கு அடுத்த லெவலில் அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக திகழ்கின்றனர்.

இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் அஜித் சில காட்சிகளிலே மட்டுமே வருவார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் இணைக்க ஒரு இயக்குனர் முயற்சித்து வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனி ஒருவன் பட இயக்குனர் மோகன்ராஜா தான்.

இவர்களுக்கான கதையை தேர்வு செய்துவிட்டதாகவும் விரைவில் அவர்களை சந்தித்து அந்த கதை குறித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அது நிச்சயம் ரசிகர்களுக்கு செம மாஸ் விருந்தாக அமையும் என நம்பலாம்.

சிம்பு-விஜய்சேதுபதி கூட்டணியிலிருந்து நடிகர் விலகல்; நடிகை இணைந்தார்

சிம்பு-விஜய்சேதுபதி கூட்டணியிலிருந்து நடிகர் விலகல்; நடிகை இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aditi Rao collaborate with Mani Ratnam againகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, பகத்பாசில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கால்ஷீட்க்கு தேதிகள் ஒத்துவராததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது மற்றொரு நாயகியாக காற்று வெளியிடை பட நாயகி அதிதிராவ் இப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Rao collaborate with Mani Ratnam again

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Goli Soda trailer will be released on 14th Feb Valentines Dayபிரபலமான ஒளிப்பதிவாளர்கள் தற்போது இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.

அதில் ஒருசிலரே வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர் எஸ்.டி.விஜய் மில்டன்.

‘கோலிசோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர்.

தற்போது ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் சமுத்திரக்கனி முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடன் கௌதம் வாசுதேவ் மேனனையும் நடிகராக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

சுபிக்ஷா இதில் நாயகியாக நடிக்க, விஜய்மில்டனின் சொந்த நிறுவனமான ‘ரஃப் நோட்’ தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இதன் டிரைலரை பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

அன்றைக்கு என்ன ஸ்பெஷல் தெரியும்தானே.? காதலர் தினம் என்பதையும் நாங்கள்தான் சொல்ல வேண்டுமா?

Goli Soda 2 trailer will be released on 14th Feb Valentines Day

ரசிகர்களின் இடத்திற்கே சென்று போட்டோ எடுக்கும் லாரன்ஸ்; ஏன்.?

ரசிகர்களின் இடத்திற்கே சென்று போட்டோ எடுக்கும் லாரன்ஸ்; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence going to meet his fans to take photosநடிகர், நடிகைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வழக்கம் ரசிகர்களுக்கு எப்போதும் இருந்து வருகிறது.

இதனால் பல ரசிகர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, நடிகர்கள் வசிக்கும் பகுதிகளில் பல மணி நேரங்கள் காத்திருப்பார்கள்.

ஒரு சில நடிகர்கள் முன்வந்து படம் எடுப்பார்கள். சிலர் தவிர்த்து விடுவார்கள்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இனி ரசிகர்கள் என்னை காண நேரில் வர வேண்டாம்.

நானே உங்கள் இடத்திற்கு வருகிறேன். அப்போது போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தையும் அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஒரு ரசிகர் ஊரில் இருந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

எனவேதான் இவர் நேரில் வருகிறேன் என அறிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி சேலம் செல்கிறார்.

இனி அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லவிருக்கிறாராம்.

Raghava Lawrence‏ @offl_Lawrence 1h1 hour ago
Hi dear Friends and Fans..! I’m coming for you to Salem on 7th

Raghava Lawrence going to meet his fans to take photos

கருணாஸ் துவங்கும் ரெத்தினவிலாஸ் பாரம்பரிய உணவு இல்லம்

கருணாஸ் துவங்கும் ரெத்தினவிலாஸ் பாரம்பரிய உணவு இல்லம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunas started new Rathina vilas hotel at Dindigulநடிகர் கருணாஸ் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் அரசியல் கட்சியிலும் உள்ளார். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ரெத்தினவிலாஸ் உணவகம் ஒன்றை துவங்கவிருக்கிறார்.

அதுபற்றிய விவரம் வருமாறு….

உணவுப் பழக்க வழக்கங்கள் என்பது ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப்படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். அந்த வாழ்வியல் சூழலோடு ஒன்றி வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்!

‘சமைத்தல் ‘ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது ‘அடுதல் ‘ எனப்படும். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன நம் முன்னோரின் சமையலின் முறைகள்.
உலகமயமாதலின் உணவு படையெடுப்பே நமது பாரம்பரியஉணவு அழிக்க வந்த நவீன அடையாளம், நவீன உணவுகளின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவுமுறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது.

நிகழ்கால உணவுப் பழக்கவழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்க ளோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களை மீண்டும் உங்களுக்கு வழங்க தொடங்கப்பட்டதுதான் “ ரெத்தின விலாஸ் பாரம்பரிய உணவு இல்லம்”

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி’ எனப் பின்னர் வழங்கப்பட்டது.

திடப்பொருள்களையும் இறைச்சிப்பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக்காலத்தில் ‘சட்டினி ‘ என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்த துவையல் ‘கைமா ‘ என்ற உருதுச் சொல்லால் வழங்கப்படுகிறது.

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது (நெல்லரிசி, குறு நொய் அரிசி, சோளம், கம்பம்புல், கேழ்வரகு, வரகரிசி) கஞ்சியாகும். கஞ்சியினை ‘நீரடுபுற்கை ‘ என்கிறார் திருவள்ளுவர் (நீர் + அடு + புல் + கை). கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர்.

பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெய்யில் இட்ட பண்டங்கள் (குறிப்பாக வடை, பஜ்ஜி, மிக் சர், காரச்சேவு போன்றவை) அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய் விசய நகர ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண்ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன.

பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை அதில் எண்ணெய் மிக முக்கியமானது. அவற்றின் பொருளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சர்க்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்து விட்டன.

உணவு என்பது ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. ஒரு நாட்டின் பழக்கம்! இனிமை ததும்பும் சர்க்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகளை ஒடுக்குவதற்கு அதே சர்க்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது.

இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத்தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.

நவீன உணவு வகைககள் நம்மை நோயாளிகாக மாற்றவே உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்! நோயை உருவாக்கினால் அதற்குரிய மருந்து களை உருவாக்க முடியும். ஆகவே அவர்கள் நோயை கொல்ல வந்தவர்கள் இல்லை! நோயை உருவாக்க வந்தவர்கள்!

இந்த பெரும் உணவுமாற்றத்தை.. மாற்றியமைத்து தமிழர் உணவு வகைகளை வருங்கால இளைய தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தில்.. இந்த பாரம்பரிய உணவு இல்லத்தை தொடங்கியிருக்கிறோம்! வணிகச்சிந்தனை என்பதை கடந்து, உணவே மருந்து என்பதை உணர நாங்கள் இந்த உணவகத்தை உருவாக்கியிருக்கிறோம்.

4.2.2018 ( ஞாயிறு ) அன்று திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு என்ற இடத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் எமது பாரம்பரிய உணவு இல்லத்திறப்பு விழாவிற்கு! இயற்கை உணவை விரும்புவோரும், பாரம்பரியத்தை ருசிப்போரும், பொதுமக்களும், ஊடகவியலாளர்களும், என திரளாகக் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்! உணவில் புதியமாற்றத்தை ஏற்படுத்தி.. மறைக்கப்பட்ட நமது பாரம்பரியை உணவை மீட்டெடுப்போம்!
அனைவரும் வாரீர்!! ஆதரவு தாரீர்!!

Actor Karunas started new Rathina vilas hotel at Dindigul

விஜய் 62 படத்தில் இணைந்த ட்வின்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்

விஜய் 62 படத்தில் இணைந்த ட்வின்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Laxman Twin stunt masters teams up with Vijay for Thalapathy 62

சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 62.

இதுவரை தலைப்பிடாத இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இதன் சூட்டிங் தொடங்கியது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இரட்டையர்களான ராம்-லக்ஷ்மன் ஆகியோர் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

இவர்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Laxman Twin stunt masters teams up with Vijay for Thalapathy 62

More Articles
Follows