மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சாமி..?

மகேஷ் பாபு-கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சாமி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu and arvind swamy20 வருடங்களுக்கு முன்பு அழகான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது வில்லனாக சில படங்களிலும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு முன்பே தனி ஒருவன் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மகேஷ் பாபுவின் தெலுங்கு படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

பரசுராம் இயக்கவுள்ள சர்காரு வாரி பாட்டா எனும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சுவாமி நடிக்க தான் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் கொலை.; அதிகார துஷ்பிரயோகம் என கமல் கண்டனம்

போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் கொலை.; அதிகார துஷ்பிரயோகம் என கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Father son die in judicial custody in Sattankulam Kamal Condemns TN Policeதூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை ஒன்றை நிர்வகித்து வந்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி (கொரோனா ஊரடங்கு சமயத்தில்) கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்துள்ளதாக அங்கு சென்ற போலீஸ் அவரை திட்டியுள்ளனர்.

மாலை 7.30 மணிக்கு சாத்தான்குளம் 2 எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் அப்போது அங்கு இருந்துள்ளனர்.

ஜெயராஜ்க்கும் போலீசுக்கும் வாக்குவாதம் தொடர “ஸ்டேஷனுக்கு வா” என ஜீப்பில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த விஷயம் ஜெயராஜ் மகன் பென்னிஸ்க்கு தெரிய வரவே அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.

“என் அப்பாவை ஏன் கூட்டிட்டு வந்தீங்க” என 2 எஸ்ஐ-க்களிடமும் கேள்வி கேட்டுள்ளார்.

இதனையடுத்து முன்பே ஜெயராஜை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கடுப்பான பென்னிக் போலீசாரிடம் மீண்டும் கேள்வி கேட்க அவரையும் லத்தியால் அடித்துள்ளனர்.
இதனையடுத்து 21ஆம் தேதி தந்தை – மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு கோவில்பட்டி ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலிப்பதாக பென்னிக்ஸ் கூற கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார். அடுத்து நாள் அதாவது இன்று காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார்.

அப்பா மகன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
s
இந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

இவ்வாறு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில்…

‘பெனிக்ஸ் என்பவரும், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த படுகொலையை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைத்து நம்முடைய எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும்.

Father son die in judicial custody in Sattankulam Kamal Condemns TN Police

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியல.; கமல் ஆதங்கம்

A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியல.; கமல் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள் பல உண்டு. அதில் உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலையும் ஒன்று,

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்துள்ளது.

இது குறித்து கமல் கூறியுள்ளதாவது.. “ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய காதல்.. அடுத்த திருமணம்..; கணவருக்கு ட்விஸ்ட் கொடுத்த ஆர்த்தி

புதிய காதல்.. அடுத்த திருமணம்..; கணவருக்கு ட்விஸ்ட் கொடுத்த ஆர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress arthi face appதமிழ் சினிமாவில் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தாலும் நடிகைகள் ஒரு சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றொரு காமெடி நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி.

இந்த நிலையில் ஒரு ஆணின் படத்தை பதிவு செய்து இவர் தான் தனது புதிய காதலர், டார்லிங் எனவும் இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அது ஃபேஸ் ஆப்’ என்ற மொபைல் ஆப் மூலம் தனது முகத்தை ஆண் முகம் போல் மாற்றிய தகவல் பின்னர் தான் தெரிய வந்துள்ளது.

கொரோனா தாக்கி மரணமா.? பொய்யர்களுக்கு நயன்-விக்கி பதிலடி (CUTE VIDEO)

கொரோனா தாக்கி மரணமா.? பொய்யர்களுக்கு நயன்-விக்கி பதிலடி (CUTE VIDEO)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara and Vignesh Shivan dismiss Reports of Corona Positive With Jokes Videoகொரோனா வைரஸ் தாக்குதலால் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பிரபலங்கள் குறித்து வதந்தியும் பரவி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு செய்தியில்லை)

அது முற்றிலும் வதந்தி என தெரிவித்து கோபமடைந்துள்ளார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.

அவரின் ட்விட்டர் பதிவில்… நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக நடனமாடுவது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எங்களைப் பற்றிய செய்திகளை இப்படித் தான் பார்க்கிறோம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்கள் டிசைன் செய்த உங்களையும் அப்படித் தான் பார்க்கிறோம். என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VigneshShivN/status/1274766726761033728

Nayanthara and Vignesh Shivan dismiss Reports of Corona Positive With Jokes Video

விஜய் பிறந்தநாளுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

விஜய் பிறந்தநாளுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday நடிகர் விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே கடந்த ஒரு வாரமாக இணையத்தில் விஜய் தொடர்பான வீடியோக்கள், படங்கள் உலா வருகின்றன.

பெரும்பாலானவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் விஜய் பாடல்கள் நிரம்பி வழிகின்றன.

விஜய்க்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் மறு பக்கம் அஜித்துக்கு டிரெண்டிங் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

#ThalafansDay மற்றும் #NonPareilThalaAjith உள்ளிட்ட ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இன்று அஜித் படம் தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை. அப்படியிருக்கையில் அஜித் ரசிகர்கள் எதையும் டிரெண்ட் செய்ய வேண்டியதில்லை.

ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாகவே இவ்வாறு செயல்படுகின்றனர். இந்த போட்டி பொறாமை குணம் என்று மாறுமோ? என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

விஜய் அஜித் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களின் போட்டிக்கு.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..?

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday

More Articles
Follows