தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thani oruvan stillsரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார் என ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் தனி ஒருவன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன் தனித் திறமையை நிரூபித்தவர் மோகன் ராஜா.

இப்படத்தில் இவரது தம்பி ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, நாயகியாக நயன்தாரா, வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தனர்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் திருநாளில் வெளியானது.

மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை.

Thani Oruvan 2 officially announced by Mohan Raja and Jayam Ravi

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை அறைந்த சிம்பு

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை அறைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Simbu Welcome Bigg Boss 2 Mahat video goes viralபிரபலமான நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் மஹத்.

அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜய்யுடன் ‘ஜில்லா’, சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் கலந்துக் கொண்டார்.

சுமார் 70 நாட்கள் கடந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது மஹத் வெளியேறினார்.

அதன்பின்னர் நடிகரும் இவருடைய நண்பருமான சிம்புவை சந்தித்துள்ளார்.

அப்போது சிம்பு அடித்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையில் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார் மஹத்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபின் அங்கிருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் நடிகை யாஷிகா மீது காதல் கொண்டதால், அவரது முன்னாள் காதலிக்கும் மஹத்துக்கும் பிரச்சினை உருவானது.

இதனால் அவர்களின் காதல் முறிந்து போனதாக கூறப்படுகிறது. இனி என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Actor Simbu Welcome Bigg Boss 2 Mahat video goes viral

செப்டம்பர் 3வது வாரத்தில் *சர்கார்* சிங்கிள் ட்ராக் வெளியீடு

செப்டம்பர் 3வது வாரத்தில் *சர்கார்* சிங்கிள் ட்ராக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie single track willbe released on 19th September 2018ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

முழுக்க அரசியல் சாயத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது சர்கார் படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்களை ஒவ்வொரு போட்டோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் இசை அக்டோபர் 2-ந்தேதி வெளியாகிகவுள்ள நிலையில் செப்டம்பர் 19-ந் தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகயிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sarkar movie single track willbe released on 19th September 2018

செல்ல குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

செல்ல குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedian Soori celebrated his birthday in his Childrens new homeகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகி விட்டதால், காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே சூரி மற்றும் யோகி பாபு படங்களுக்கு நல்ல மார்கெட் உள்ளது.

முக்கியமாக சூரியின் காமெடிக்கும் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் அவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு சிவகார்த்திகயேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஆனால், சூரியோ, மகள் வெண்ணிலா, மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன் முறையாக ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Actor Soori‏ @sooriofficial
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி!

அவரது குழந்தைகள் பத்து வயதுக்கு உட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Soori celebrated his birthday in his Childrens new home

அந்த லிங்க் இதோ…

https://twitter.com/sooriofficial/status/1033985543447568384

அம்மா சரிகாவுக்கு ராக்கி கட்டி ரக்‌‌ஷா பந்தன் கொண்டாடிய ஸ்ருதி

அம்மா சரிகாவுக்கு ராக்கி கட்டி ரக்‌‌ஷா பந்தன் கொண்டாடிய ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shrutihaasan-tied Rakhi to her mother on Raksha Bandhan dayஆகஸ்ட் 26 நேற்று இந்தியா முழுவதும் ரக்‌‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.

ரக்‌ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்குள் உள்ள அன்பை பாசத்தை வெளிப்படுத்த ராக்கி கயிறு கட்டி கொண்டாடுவார்கள்.

வட இந்தியாவில் பிரபலமான இந்த நிகழ்வு தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார்.

அதாவது தனது அம்மா சரிகாவுக்கு ராக்கி கயிறை கட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது…

“என் அம்மாவும் நானும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன்.

எனக்கு சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Shrutihaasan-tied Rakhi to her mother on Raksha Bandhan day

ரஜினி படத்திற்காக ஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறினாரா த்ரிஷா.?

ரஜினி படத்திற்காக ஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறினாரா த்ரிஷா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Trisha new hair style look goes viralகாலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த நாயகிகள் தற்போது ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய ஹேர் ஸ்டைல் லுக்குடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அது பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்த பின்னர் ஓவியா வைத்த அதே ஸ்டைலில் உள்ளது.

அதில் ஒரு பெண் தன் முடி அலங்காரத்தை மாற்றினார் அது அவள் வாழ்க்கையை மாற்றும் என்பது போல பதிவிட்டுள்ளார்.

அதற்கு கோகோ சேனல் எனவும் பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி படத்திற்கா? அல்லது வேறு லுக்கா? என்பது தெரியவில்லை.

Actress Trisha new hair style look goes viral

More Articles
Follows