‘துணிவு’ தயாரிப்பாளருடன் ஸ்ரீதேவி மகள்.; தேசிய விருது பெற்ற மதுகுட்டியுடன் கூட்டணி

‘துணிவு’ தயாரிப்பாளருடன் ஸ்ரீதேவி மகள்.; தேசிய விருது பெற்ற மதுகுட்டியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார்.

இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும் ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான்.

ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில், ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மிலி

‘Mili’ teaser Actress Janhvi Kapoor’ s Mili teaser is out

Mili Teaser

DYING TO SURVIVE! HERE IS THE FIRST LOOK OF #MILI

RELEASING IN CINEMAS ON 4TH NOVEMBER

?- https://bit.ly/MiliTeaser

@BoneyKapoor #JanhviKapoor @sunnykaushal89 @arrahman @Javedakhtarjadu @actormanojpahwa @mathukutty_here @ZeeStudios_ @bayviewprojoffl @hasleenkaur @ZeeMusicCompany

அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக.; கவிஞர் வைரமுத்து ஏன் இப்படி சொன்னார்.?

அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக.; கவிஞர் வைரமுத்து ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி வருவது அடிக்கடி நடந்து வரும் ஒன்றுதான்.

ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள பலர் முன் வந்தாலும் சில அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக ஹிந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை தங்கள் சுயலாபதிற்காக ஹிந்தி படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…

“எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை

தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?

அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்

புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக

#HindiImposition

என பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

ஹர்பஜன்சிங் & இர்பாஃன்பதானை அடுத்து சினிமாவில் களமிறங்கும் தோனி.; விஜய்யுடன் கூட்டணி

ஹர்பஜன்சிங் & இர்பாஃன்பதானை அடுத்து சினிமாவில் களமிறங்கும் தோனி.; விஜய்யுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பல விளம்பர படங்களில் நடித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது இவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். இதில் நாயகியாக லொஸ்லியா நடித்து இருந்தார்.

அதுபோல் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் இர்பாஃன் பதான் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சினிமாவில் களமிறங்க உள்ளார்.

ஆனால் இவர் நடிகராக இல்லாமல் சினிமா படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தோனி பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு படங்களை தயாரிக்க உள்ளார் தோனி.

இவர் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்கவுள்ளார்.

எனவே இந்த நிறுவனம் சார்பாக அவர் தயாரிக்க உள்ள படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பின்னர் விஜய்யின் 70 வது படத்தை தோனி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தோனியின் ராசி எண் 7. அதன்படி விஜய்-70 படத்தை தோனி தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

Thala Dhoni to produce film with Thalapathy Vijay

‘மாமனிதன்’ & ‘கடைசி விவசாயி’ படங்களுடன் கனெக்ட்டான ‘காலங்களில் அவள் வசந்தம்’

‘மாமனிதன்’ & ‘கடைசி விவசாயி’ படங்களுடன் கனெக்ட்டான ‘காலங்களில் அவள் வசந்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார்.

சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர்…

“காதல் என்றால் வெறும் ஆண் பெண் கவர்ச்சியா இல்லை அதையும் தாண்டிய ஒரு உணர்வா என்னும் கேள்விக்கு விடை தேடும் ஒரு ஜனரஞ்சகமான ரொமாண்டிக் திரைப்படமே ‘காலங்களில் அவள் வசந்தம்’,” என்றார்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வானவில்லின் அழகிய காட்சியில் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சினேகா!

வானவில்லின் அழகிய காட்சியில் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சினேகா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்த நாளான இன்று காலை தனது காதல் கணவர் பிரசன்னாவுடன் எப்படி மகிழ்ந்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்

சினேகாவின் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் ஒரு காதல் பயணத்திற்கு புறப்பட்டனர்.

அழகான இந்த ஜோடி க்கு பின்னால் இயற்கையின் அம்சமான வானவில் தோன்றி மேலும் அழகான காட்சியாக தெரிகிறது.

தனது நாளின் படங்களைப் பகிர்ந்து கொண்ட சினேகா, “இயற்கை அன்னையின் ஆசீர்வாதத்துடன் பிறந்தநாள் தொடங்குகிறது!!!” என பதிவிட்டுள்ளார்

‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.

இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.

வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜய்ஸ்ரீ.

தமிழகத்தில் இல்லாத ஒன்றை இயக்குனர் காட்சிகளாக வைத்திருப்பது நெட்டிசன் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நரபலி கொடுத்த மனித உடலை கறி போல வெட்டி துண்டு துண்டாக சாப்பிட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர் 2 தமிழக பெண்கள்….

சடலங்களை 56 துண்டுகளாக வெட்டி மாமிசம் சாப்பிட்டதாக கேரள தம்பதியினர் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படத்தின் காட்சிகள் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Powder movie human meat controversy now happened at Kerala

Here’s #Powder official trailer

https://www.filmistreet.com/video/powder-official-trailer/

More Articles
Follows