போனிகபூரை தெரியாது.. ஆனால் ஸ்ரீதேவியை தெரியும்.. – மிஷ்கின்

போனிகபூரை தெரியாது.. ஆனால் ஸ்ரீதேவியை தெரியும்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியதாவது…

இங்குப் பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக்குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தை நான் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார் டான்ஸ் ஃபைட் ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…

இந்தப்படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. எனக்கு போனிகபூரைத் தெரியாது ஆனால் ஸ்ரீதேவியைத் தெரியும் இந்த உலகில் வாழ்ந்த மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவர் அவர்.

இன்று போனிகபூர் சாரை சந்தித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ரமணா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தக்குழு என்னை அழைத்த போது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஒரு குழுவாக அனைவரும் உழைப்பும் துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது.. படம் மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இப்படத்தினை தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

டைனோசர்ஸ்

mysskin speech in dienosirs movie trailer luanch

உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை.. – விஜயகுமார்.; தடைகளை தாண்டி வந்தவன் நான் – அருண்விஜய்

உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை.. – விஜயகுமார்.; தடைகளை தாண்டி வந்தவன் நான் – அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகுமார் பேசியதாவது..

இந்த படத்தின் டிரெய்லர் முடிந்ததும் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் பேசினார், அதை வைத்தே சொல்லுகிறேன் அவர் மட்டுமல்லாது படக் குழுவினர் அனைவரும் அதே நம்பிக்கையோடு உள்ளனர்.

கதையின் நாயகன் உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை அவருக்காகத் தான் இங்கு வந்தேன்.. படக்குழுவினர் அனைவரும் புதிது என்றனர். இப்போது படத்தின் கதையும் படமும் தான் முக்கியம் எனவே மக்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது…

எனக்கு இங்குள்ள அனைவரது மனநிலை தெரியும்.. நானும் அது போலத் தான் பல தடைகளைத் தாண்டி வந்தேன், படத்தின் டிரெய்லரை பார்த்தேன் நன்றாக உள்ளது.

மாதவன் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார் வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் மிகவும் நம்பிக்கையாகப் பேசுகிறார்.. நான் இப்படி ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து இல்லை , போனி கபூர் சார் கொடுத்த ஆதரவிற்கு நன்றி மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

டைனோசர்ஸ்

arun vijay speech in dienosirs movie trailer luanch

விஜய்சேதுபதி-யின் 50வது படத்தில் பாலிவுட் பிரபலம்.; டைட்டில் மாஸா இருக்கே.!

விஜய்சேதுபதி-யின் 50வது படத்தில் பாலிவுட் பிரபலம்.; டைட்டில் மாஸா இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி தனது ஐம்பதாவது படத்தை நெருங்கி உள்ளார்.

இவரது ஐம்பதாவது படத்தை ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்க உள்ளார்.

இப்படத்தில் ‘நட்டி’ நடராஜ் , முனீஷ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குமுன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anurag Kashyap joins vijay sethupathis 50th movie

வாடிவாசல் படம் குறித்து 2 முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்ட தாணு!

வாடிவாசல் படம் குறித்து 2 முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்ட தாணு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாடி வாசல் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் கலைப்புலி எஸ் தாணு, இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் படம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சோதனை படப்பிடிப்பு நடந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக நூற்றுக்கணக்கான காளைகள் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பகிர்ந்து கொண்டார்.

கால்நடைகளுக்கான தீவனம் மட்டுமின்றி பணியாளர்களுக்கு மட்டும் இதுவரை சுமார் ஒன்றரை கோடி செலவாகியுள்ளது.

லண்டனை சேர்ந்த நிறுவனம் கிராபிக்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தாணு மேலும் கூறினார்.

Vaadi Vaasal official update given by producer thanu

நிவின் பாலி – அஞ்சலி – சூரி இணைந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நிவின் பாலி – அஞ்சலி – சூரி இணைந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தனது ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி டப்பிங் பேசும் வீடியோ படக்குழு தற்போது வெளியிட்டு அறிவித்துள்ளது.

நிவின் பாலி - அஞ்சலி - சூரி

‘Yezhu kadal yezhu malai’ movie team complete dubbing work

BREAKING சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த மாமுக்கோயா மரணம்.; வாழ்க்கை குறிப்பு..

BREAKING சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த மாமுக்கோயா மரணம்.; வாழ்க்கை குறிப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மாமுக்கோயா.

இவருக்கு வயது தற்போது 77 ஆகிறது.

மலையாள சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் காமெடியனாகவும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 26 உயிரிழந்தார்.

இவரது மரணம் மலையாளிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்கினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மாமுக்கோயா பற்றி சில தகவல்கள்…

45 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வருகிறார். இவர் பேசும் மலபார் மொழி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இவர் பிரபல நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் இவர் நடித்துள்ளார்.

இவர் நிறைய மலையாள படங்களில் டீக்கடை நடத்துபவராக நடித்துள்ளார். ஆனாலும் தன் நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்திருந்தார்.

இவரது மனைவி பெயர் சுகாரா. இந்த தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் (Muhammed Nisar, Shahitha, Nadiya and Abdul Rasheed.) உள்ளனர்.

முதலில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1979 ஆம் ஆண்டு முதன்முறையாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், மின்னல் முரளி, உஸ்தாத் ஹோட்டல், நாடோடி காற்று உள்ளிட்ட பல படங்கள் இவரது பெயரைச் சொல்லும்.

‘Pattanapravesham’, ‘Unnikale Oru Kadha Parayam’, ‘Vadakkunokkiyantram’, ‘Kireedam’, ‘Oppam’, ‘Sandesham’, ‘Chenkol’, ‘Sharjah To Sharjah’, ‘Vettam’, ‘Sreedharante Onnam Thirumurivu’, ‘Currency’, ‘Oru Marubhoomi Kadha,’ ‘Indian Rupee,’ ‘Kuruthi’, ‘Theerppu’ உள்ளிட்ட படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

கேரள அரசின் மாநில விருதை இரண்டு முறை (‘Perumazhakkalam’ – 2004, ‘Innathe Chintha Vishayam’ – 2008) இவர் பெற்றிருக்கிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சுலைக்கா மஞ்சில்’. மேலும் இவரது நடிப்பில் ( ‘B Nilavarayum Sharjah Palliyum’ and ‘Nancy Rani’) கிட்டத்தட்ட 3-5 படங்கள் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

Veteran Malayalam actor Mamukkoya 76 passes away in Kerala

More Articles
Follows