அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இந்த படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்களை ஒவ்வொன்றாக அறிவித்து வந்தனர்.

அதன்படி நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற கேரக்டரில் நடிக்க கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், பிரேம், பக்ஸ் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டுக்கு முன்னதாக டிசம்பர் 31ஆம் தேதி அன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழுடன் சென்சார் போர்டு கிடைத்தது.

Ajith’s ‘Thunivu’ movie got U/A certificate

சந்தீப் கிஷனின் பான்-இந்திய திரைப்படமான மைக்கேல் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சந்தீப் கிஷனின் பான்-இந்திய திரைப்படமான மைக்கேல் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தீப் கிஷன் மற்றும் திவ்யன்ஷா கௌசிக் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைக்கேல்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, படம் இந்தியா முழுவதும் பிப்ரவரி 3 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பான்-இந்தியா படமாக தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டார், அதில் விஜய் சேதுபதி பொறுப்பற்றவராகவும் வில்லத்தனமாகவும் இருக்கிறார்.

Sundeep Kishan’s pan-India film Michael locks release date

வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’ படம் கோடையில் ரிலீஸ்…

வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’ படம் கோடையில் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமி சரத்குமார் – சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் ‘கொன்றால் பாவம்’.

இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெய குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்ட்ராயன், டிஎஸ்ஆர் சீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மகாதவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதாசிரியரும் இயக்குநருமான தயாள் பத்மநாபன், இந்தப் படத்தை கன்னடத்திலும், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார், தங்களின் தயாரிப்பானது 2023 கோடையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Varalakshmi Sarathkumar’s ‘Kondraal Paavam’ will release in summer

விஜய்யை ஆதரித்த பத்திரிக்கையாளரை எச்சரித்த ரஜினி ரசிகர்கள்.; சீமான் சீற்றம்

விஜய்யை ஆதரித்த பத்திரிக்கையாளரை எச்சரித்த ரஜினி ரசிகர்கள்.; சீமான் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி என்பவர் சமீபத்தில் விஜய் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார் என்று பேசி இருந்தார்.

பெரும்பாலும் விஜய் படங்களையும் விஜய்யையும் போற்றியே பேசுவார் பிஸ்மி.

இதனால் அடிக்கடி ரஜினி ரசிகர்களுக்கு மத்தியிலும் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இவர் மீதான கருத்து தாக்குதல்கள் ஏற்படும்.

தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு விஷயத்தை அவர் பேசியிருப்பதால் ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்து நேராக பிஸ்மி அலுவலகத்திற்கு சென்று அவரிடம் இதற்கான விளக்கம் கேட்டனர்.

மேலும் இதுபோன்று மீடியாக்களில் நீங்கள் பேட்டி அளிக்கக்கூடாது.. ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார்.. அவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று பேசினர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்..

“சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் இருந்தார். அவருக்கு பின் அந்த இடத்திற்கு எம்ஜிஆர் வந்தார்.

சினிமாவில் ஜெயித்து எம்ஜிஆர் பின்னர் அரசியலில் நுழைந்த பின்னர் அப்போதே ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

அதன் பிறகு விஜய் அந்த இடத்திற்கு தற்போது வந்துள்ளார். எனவே ரஜினி ரசிகர்கள் ஒரு பத்திரிக்கையாளரை எச்சரிப்பது சரியல்ல.

ரஜினி ரசிகர்களுக்கு முதிர்ச்சியும் அனுபவம் பொறுப்பும் உள்ளது என நம்புகிறேன். எனவே இனி அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

இதனை ரஜினியும் விரும்ப மாட்டார்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சீமான்.

விரிவான அறிக்கை இதோ…

Rajini fans warn journalist who supported Vijay.; Seeman angry

சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதி இதோ!

சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதி இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தா அக்கினேனி டைட்டில் ரோலில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ (ஆயிரமாண்டுகளுக்கான புராணக் கதை என்று வர்ணிக்கப்படுகிறது), குவான்சேகர் எழுதி இயக்கியுள்ளார். தில் ராஜு வழங்கும் இப்படத்திற்கு திரையரங்குகளில் ரிலீஸ் தேதி கிடைத்துள்ளது.

3டியில் மேம்படுத்தப்பட்ட காதல் கதை பிப்ரவரி 17 அன்று திரைக்கு வருகிறது.

‘யசோதா’ படத்திற்குப் பிறகு சமந்தாவின் அடுத்த திரையரங்கு வெளியீடு இதுவாகும். குணசேகர் ப்ரீ-புரொடக்‌ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷனில் விரிவாக பணியாற்றினார்.

Samantha’s ‘Shaakuntalam’: Here is the release date!

BREAKING பாஜகவிலிருந்து விலகல்.. அண்ணாமலை மீது ஆதாரங்களுடன் புகார்.; காயத்ரி ரகுராம் அறிவிப்பு

BREAKING பாஜகவிலிருந்து விலகல்.. அண்ணாமலை மீது ஆதாரங்களுடன் புகார்.; காயத்ரி ரகுராம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் பாஜக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

நடிகைகள் குஷ்பூ, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

சமீப காலமாக காயத்ரி ரகுராம் மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையே மோதல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை காயத்ரி.

காயத்ரி ரகுராம்

இது தொடர்பான அவரது பதிவில்

பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என குற்றச்சாட்டு. இத்துடன் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்து அண்ணாமலை மீது புகார் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் காயத்ரி.

காயத்ரி ரகுராம்

Gayathri Raghuram Announcement against for Annamalai

More Articles
Follows