தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’.
இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி மற்றும் ஜூட் அகுவுடிகே ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு மாயாஜால வீடியோவானது அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தன் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Janhvi Kapoor steps into the world of The Little Mermaid