செல்வராகவன் இயக்கத்தில் இணையும் அஜித் – தனுஷ் – பரத்.!

செல்வராகவன் இயக்கத்தில் இணையும் அஜித் – தனுஷ் – பரத்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதே போன்று நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் உறுதியானால் தன் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும் என நடிகர் பரத் நேர்காணல் ஒன்றில் கூறினார்.

Ajith – Dhanush – Bharath to joins Selvaraghavan’s direction

சிரஞ்சீவி பிறந்தநாளில் ‘மெகா 157’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வசிஷ்டா

சிரஞ்சீவி பிறந்தநாளில் ‘மெகா 157’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வசிஷ்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும்.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா நமக்குக் காட்டப் போகிறார்.

வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது.

வசிஷ்டா தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தவர் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதால், #Mega157 ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

நடிகர் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில் நுட்ப குழு
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : வம்சி, பிரமோத், விக்ரம்
தயாரிப்பு நிறுவனம் : UV கிரியேஷன்ஸ்.

மெகா 157

Chiranjeevis Mega Mass Beyond Universe Mega157 Announced

மீண்டும் இணையும் ‘கேப்டன் மில்லர்’ கூட்டணி.; தனுஷ் தயாரிப்பில் உருவாகிறது

மீண்டும் இணையும் ‘கேப்டன் மில்லர்’ கூட்டணி.; தனுஷ் தயாரிப்பில் உருவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்படுள்ளது.

தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் உடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் இணைய உள்ளதாக தனுஷ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான உண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்

Again Dhanush and Arun Madheswaran join together

தமிழ் பையன் பெண்களே ‘குஷி’ படம் ரொம்பவே குஷிப்படுத்தும் – விஜய் தேவரகொண்டா

தமிழ் பையன் பெண்களே ‘குஷி’ படம் ரொம்பவே குஷிப்படுத்தும் – விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன் போது படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களுமான என். வி. பிரசாத், முகேஷ் ஆர். மேத்தா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி. சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான என். வி. பிரசாத் பேசுகையில்..

‘ மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த அதிக திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும்.

இந்த படத்திற்கு தமிழிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தா பேசுகையில்…

” குஷி படத்தினை கேரளாவில் வெளியிடுகிறேன். கேரளாவை பொறுத்தவரை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிறகு அதிக அளவிலான ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்குத் தான் இருக்கிறார்கள்.

இந்த குஷி திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘குஷி’ திரைப்படத்தை வெளியிடுகிறது. இந்த படமும் மிகப் பெரும் வெற்றியை பெறும். ” என்றார்.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி பேசுகையில்…

” மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘குஷி’ திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்த்தோம். அனைத்தும் கிளாஸாகவும், கிராண்டியராகவும் இருந்தது. இசையும் கமர்சியலாக இல்லாமல், கிளாஸ்ஸிக்காக இருக்கிறது. ஹீரோ விஜய் தேவரகொண்டா- ரியல் பான் இந்தியா ஸ்டார்.

விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்து, அவர் எங்களுக்கும் குஷி தர வேண்டும். இந்த திரைப்படம் அனைத்து இடங்களிலும் பெரிய வெற்றியைப் பெற்று, அனைவருக்கும் குஷியை உண்டாக்கும். பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசுகையில்….

” என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம் . இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் 1 தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும்.

‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

விஜய் தேவரகொண்டா

Kushi movie will entertain Tamil audience says Vijay devarakonda

இளையவர் யோகி காலில் விழுந்தது ஏன்.? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்

இளையவர் யோகி காலில் விழுந்தது ஏன்.? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்திற்காக இமயமலை ஹரியானா உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இருந்தார்.

அங்கு பாபா குகையில் தியானம் செய்தார். அதன் பின்னர் அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி அங்கு உள்ள சன்யாசி துறவிகளை சந்தித்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி தன்னுடைய பயணங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

‘ஜெயிலர்’ படத்தை மிகப்பெரிய வெற்றிபெற வைத்த என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி படத்தை எனக்கு வழங்கிய கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கும் மனமார்ந்த நன்றி.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்தவர்… வயது குறைவானவர்களாக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள், காலில் விழுவது என்னுடைய பழக்கம்.

உத்திரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன் என தெரிவித்தார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது.. “அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறி சென்றார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

It is my habit to fall at feet of sanyasis or Yogi even they are younger to me said Rajini

பயில்வானுக்கு ரெண்டு ஆஸ்கர்.. நடிகர் கூல் சுரேஷ் ஊமை… – ஜீ.வி. பிரகாஷ்

பயில்வானுக்கு ரெண்டு ஆஸ்கர்.. நடிகர் கூல் சுரேஷ் ஊமை… – ஜீ.வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக்கு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஜீ. வி. பிரகாஷ் பேசுகையில்…

” இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது அனுபவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கியிருப்பார்.. சென்னையில் பனி மழை.. நடிகர் கூல் சுரேஷ் ஊமை.. என இயக்குநர் ஒவ்வொரு நாளும் எனக்கு அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறாரே..! என நினைக்க வைப்பார்.

தயாரிப்பாளர் பிரேம்குமாருக்கு நன்றி. படத்தை தெளிவாக திட்டமிட்டு நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் வலிமையான பட தயாரிப்பு நிறுவனமாக உயர்வார்கள்.

படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான முதல் படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘அடியே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு அவருக்கு திரையுலகிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் அவரும் முன்னணி இயக்குநராக உயர்வார். ” என்றார்.

GV Prakash fun speech at Adiyae press meet

More Articles
Follows