தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் 3 வேடங்களில் நடித்து அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் நித்யா மேனன், வடிவேலு, எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.
இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜய்யின் மகனாக குட்டி தளபதியாக அக்சத் தாஸ் என்ற குட்டி பையன் நடித்திருப்பார்.
இந்த பையன் அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியில் விரைவில் அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அது அஜித்தின் வலிமை படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Mersal child actor Akshath to play role in Ajiths Valimai