“சினம்” படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு !

“சினம்” படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijayஎதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது அருண் விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா” திரைப்படம். ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு வழியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது “மாஃபியா”. தொடர் வெற்றிகளை தந்துவருவதோடு விழாக்காலமில்லாமல் சாதாரண நேரத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற படமாக விநியோகஸ்தர்களாலும், விமர்சகர்களாலும் “மாஃபியா” கொண்டாப்படுவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளார் அருண் விஜய். “மாஃபியா” ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியா சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு, உற்சாக வரவேற்பில் மனதெங்கும் புத்துணர்வு பரவி, பெரு மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் அருண் விஜய். தற்போது வெற்றியை கொண்டாடும் நேரமே இல்லாமல் அடுத்த அதிரடிக்கு “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாரகிவிட்டார் அருண் விஜய். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் GNR குமரவெலன் இது குறித்து கூறியதாவது…

இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறக்கூடிய கதையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா ? மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே !எனத் தோன்றியது. ஆனால் நானே எதிர்பாரா விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம், காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக , உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kamalதர்பார் பட சமயத்தின் போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் புதிய படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின.

அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியனது.

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இப்பட பூஜை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஜினி & லோகேஷ் இருவரும் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu producerசில நாட்களுக்கு இந்தியன் 2 சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.

இந்த விபத்தில் ஷங்கர், கமல் நூலிழையில் உயிர் தப்பினர்.

இனிமேல் சினிமா தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்தன.

இதனை வெறும் பேச்சாக இல்லாமல் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தன் பட தொழிலாளர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

96 படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தில் ராஜு

96 படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தில் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 jaanuகடந்த 2018 ஆண்டில் வெளியாகி தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்ற படம் 96.

தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து காதலர் தின விருந்தாக வெளியிட்டனர்.

முதலில் ஒரு எதிர்பார்ப்பில் பெரிதாக பேசப்பட்டாலும் படத்தை தமிழ் சினிமாவுடன் ஒப்பிட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

அதன் விளைவாக தற்போது பெரும் தோல்வியை கொடுத்துள்ளதாம்.

இந்த படத்தால் கிட்டதட்ட 15 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

சர்ச்சை கிளப்பிய ‘திரௌபதி’ படத்தை பார்க்க விரும்பும் ராமதாஸ் & திருமாவளவன்

சர்ச்சை கிளப்பிய ‘திரௌபதி’ படத்தை பார்க்க விரும்பும் ராமதாஸ் & திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Draupathiபழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி.

இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிச்சிருக்காய்ங்க.

இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகுது திரௌபதி.

இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிறுமுதலீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை.

இந்நிலையில், இந்த திரௌபதி திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் இன்னிக்கும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இப்படி சலசலைப்பைக் கிளப்பினாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.

இப்போ வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போறப் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் & வி.சி. தலைவர் திருமா இருவரும் பார்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்கும் வரை சீமானை விட மாட்டேன்.. :- விஜயலட்சுமி

மன்னிப்பு கேட்கும் வரை சீமானை விட மாட்டேன்.. :- விஜயலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayalakshmi seemanப்ரெண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி.

இவர் சில மாதங்களாகவே சீமானை வறுத்தெடுத்து வருகிறார். பல வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேடைக்கு மேடை அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் முக்கியமாக ரஜினிகாந்த் வரை அனைவரையும் ஒருமையில் பேசி வருவார் சீமான்.

ஆனால் இதுவரை விஜயலெட்சுமி முன் வைத்த எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி வருகிறார் சீமான்.

இந்த நிலையில், தனக்கு போதையில் தீராத தொல்லை கொடுத்ததாக விஜயலெட்சுமி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து தன்னை மிரட்டிய நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவரையும் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்த விஜயலெட்சுமி, சீமான் தன்னை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, விட மாட்டேன்..

தனது கேள்வி கேட்கும் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

More Articles
Follows