‘தளபதி 64′ படத்தில் விஜய்யுடன் இணையும் ரஜினி தங்கை?

Malavika Mohanan likely to join with Vijay in Thalapathy 64விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளியாகிறது.

இந்தாண்டு தீபாவளி விருந்தாக படத்தை வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதன் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த அக்டோபரில் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் நாயகி யார்? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கை (அதாவது சசிகுமாரின் மனைவி) ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan likely to join with Vijay in Thalapathy 64

Overall Rating : Not available

Latest Post