தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாளையத்து அம்மன், கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளவர் மலையாள நடிகை திவ்யாஉன்னி.
இவர் மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோரின் உறவினர் ஆவார.
இவர் 2002-ல் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கே குடியேறினார்.
இந்த தம்பதியருக்கு அர்ஜுன், மீனாட்சி என்ற குழந்தைகள் உள்ளனர்.
சில காலங்கள் வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
சமீபத்தில் விவாகரத்து பெற்ற திவ்யாஉன்னி தற்போது திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த மாப்பிள்ளையும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்யா உன்னியின் 2வது திருமணம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Malayala Actress Dhivya Unni got 2nd marriage