சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

எந்தவொரு அறிமுக இயக்குனராக இருந்தாலும் பிரபல நடிகர்களின் படத்தை தான் முதலில் இயக்க ஆசைப்படுவார்கள். அப்போதுதான் தன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நினைப்பதுண்டு.

ஒருவேளை டாப் ஹீரோ கால்ஷீட் கிடைக்காவிட்டால் மற்ற நாயகர்களுடன் இணைவார்கள். ஆனால் எவரும் எதிர்பாராத நிலையில் 87 வயதான சாருஹாசனை (கமல் அண்ணன்) வைத்து கடந்த 2019ல் தாதா 87 என்ற படத்தை இயக்கினார் விஜய்ஸ்ரீ ஜி.

அதற்கு முக்கிய காரணம் இவர் தன் கதை மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. மேலும் இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இத்துடன் மேலும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

அண்மையில் தாதா 87 படத்தை தழுவி ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அடுத்த அதிசயத்தை திரையுலகில் நிகழ்த்தவுள்ளார் விஜய்ஸ்ரீ.

பிரபல மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) நிகில் முருகனை ஹீரோவாக்கி ‘பவுடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்.

இந்த படம் மார்ச் மாதம் 2வது வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் ‘பப்ஜி’ என்ற படமும் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் 1980களின் பிரபல ஹீரோவான மோகனுக்கு ரீஎன்ட்ரி கொடுத்து ‘ஹரா’ என்ற படத்தை இயக்கவுள்ளார் விஜய்ஸ்ரீ. அதிலும் மோகனை ஒரு ஆக்சன் ஹீரோவாக காண்பிக்கவுள்ளார்.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பூவை ஒப்பந்தம் செய்யவுள்ளார். விஜய்ஸ்ரீ கூறிய கதையும் அவர் சொன்ன விதமும் தன்னை கவர்ந்துவிட்டதாக குஷ்பூவும் தெரிவித்திருந்தார்.

மோகன் குஷ்பூ இருவரும் தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் தெலுங்கில் (1988) ஆத்ம கதா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இத்துடன் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் படமாக்கவிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.

நிஜமாகவே வித்தியாசமான சிந்தனை கொண்டவர் தான் டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி என்று சொன்னால் அதுமிகையல்ல.

Kushboo to pair up with Mohan for the second time

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தன் கணவரும் நடிகருமான தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி தற்போது ஒரு மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே தனுஷ் நடித்த 3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முஷாஃபிர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள மியூசிக் ஆல்பத்தின் டீஸரை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் அனிருத் பாடியுள்ளார். தெலுங்கில் சாகர் மற்றும் மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்திற்கு அன்கித் திவாரி என்பவர் இசையமைக்க பே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.

Anirudh and Aishwarya Rajinikanth joins for music album

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

கடந்த 2019ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்க தொடங்கிய படம் ’கோப்ரா’.

இதில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கனிகா, மிருளாணி ரவி, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு சூழ்நிலையால் இப்பட சூட்டிங் தள்ளிக் கொண்டே போனது.

சில நாட்களுக்கு முன் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாத காட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

’கோப்ரா’ பட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

Chiyaan Vikram’s Cobra Shoot Completed

‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

சசிகுமார் நடிப்பில் உருவான ’கொம்பு வச்ச சிங்கம்’ படம் அண்மையில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை.

இதனையடுத்து சசிகுமார் நடிப்பில் ’பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ’காமன்மேன்’ படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக விமல் நடித்த ’அஞ்சல’ என்ற படத்தை இயக்கிய தங்கம் பா சரவணன் என்பவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சசிகுமார்.

சசிகுமார் ஜோடியாக அனன்யா நாகல்லா என்ற தெலுங்கு சினிமா பிரபல நடிக்கிறாராம்.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

மோகன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இப்பட பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Sasikumar joins with Anjala director for his next

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

சி.எஸ். அமுதன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கியவர் அமுதன்.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ‘ரத்தம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்துடன் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஆண்டனி.

இவையில்லாமல் ‘அக்னி சிறகுகள்’ & ‘காக்கி’ ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவன சார்பில் தாய் சரவணன் தயாரிக்க இமான் இசையமைக்கிறார்.

பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் சசீந்திரன் இமான் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

தற்போது 7 வது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் விஜய் ஆண்டனி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மூன்று மாதங்களில் இப்படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சுசீந்திரன். 1984ல் நடைபெற்ற ஒரு கொலைக் களத்தை மையப்படுத்தி இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறதாம்.

Vijayantony next with Dir Suseenthiran is going to be murder mystery

தோல்வி கொடுத்த பிரசாந்த்.. படமே இல்லாத நானும் புரொடியூசரும்..; ‘விலங்கு’ பற்றி விமல் ஓபன் டாக் 

தோல்வி கொடுத்த பிரசாந்த்.. படமே இல்லாத நானும் புரொடியூசரும்..; ‘விலங்கு’ பற்றி விமல் ஓபன் டாக் 

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிடம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.
ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக,  இயக்குனர்  பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள  “விலங்கு” ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது.
இதன் வெளியீட்டை ஒட்டி நேற்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்
ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network,  பேசியதாவது…
ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான முதல் நீ முடிவும் நீ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதனை தொடர்ந்து இன்னும் நிறைய தொடர்கள் செய்ய நினைத்துள்ளோம். நான் இந்த சீரிஸை பார்த்து விட்டேன். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும், வயலன்ஸ், செக்ஸை தாண்டி வேறொரு பாணியில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும்.
தயாரிப்பாளர் மதன், தொடரில் நடித்த  விமல், இனியா, பாலசரவணன், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி. ஜீ5 யை பொறுப்பாக எடுத்து செல்லும், எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் பேசியதாவது…
நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு இது கம்பேக். 3 வருடங்களுக்கு முன் ஆபிஸில் நான் தனியாக இருந்தபோது, ஐயப்பனை அழைத்தேன், அவன் தான் பிரசாந்த்தை கூட்டி வந்தார். அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. திருச்சியிலேயே ஷூட்டிங் எடுத்துள்ளோம். தொடர் பார்க்கும் போது அது ஏன் என்பது,  உங்களுக்கு தெரியும். பிரசாந்த் ஒரு நல்ல இயக்குநர் நாங்கள் சேர்ந்து படம் செய்தாலும் இல்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து இருக்கும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
விமல் அவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன், என் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஜீ5 எனக்கு கிடைத்தது எனக்கு வரம், சிஜு இந்த தொடரில் காட்டிய அக்கறை மிகப்பெரியது. பாலசரவணனை வேறொரு கோணத்தில் இதில் பார்க்கலாம். கணேஷ் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு அட்டகாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது…
நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன் அப்போது தான் இந்தக் கதை சொல்லி இதில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்.
ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி. அதற்கு ஒத்துழைப்பு தந்த மதன் சாருக்கு நன்றி. இந்த தொடரில் எனக்கு ஒரு உறவு கிடைத்துள்ளது. அது விமல் அண்ணன் அவருக்கு நன்றி. விலங்கு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் அஜீஷ் பேசியதாவது…
பிரசாந்த் என்ன வேண்டுமோ அதை சரியாக சொல்லி வாங்கி விடுவார். விமல் அண்ணா சூப்பராக நடித்துள்ளார். பாலசரவணன் இதில் வித்தியாசமாக நடித்துள்ளார் கண்டிப்பாக பெரிதாக பேசப்படுவார். இந்த டீம் ரொம்ப வலுவான டீம். எல்லோரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். நாங்கள் விரும்பி உழைத்த தொடர் விலங்கு, உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்  பேசியதாவது…
புரூஸ்லிக்கு பிறகு 4 வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கதையை முதலில் ஐயப்பன் அண்ணன் தான் கேட்டார். வேறொரு கதைக்காக போலீஸ் பற்றி விசாரித்து அவர்களை சந்தித்த போது அவர்கள் சொன்னதை கதையாக எடுக்கலாம் என தோன்றியது.

முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்துவிட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் சென்னையில் எடுங்கள் என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் அங்கு தான் எடுக்க வேண்டும் என்றார். அந்த அளவு கதையை நம்பினார். அவருக்கு நன்றி. கௌஷிக் இந்த புராஜக்ட் மீது காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. பாலசரவணன் நான் நினைத்ததை விட அற்புதமாக நடித்துள்ளார்.
விமல் அண்ணாவுக்கு நான் முதலில் சொன்ன கதை பிடிக்கவில்லை இந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடிப்பார். முழுக்க முழுக்க பரிதியாக மாறியுள்ளார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை இனியா பேசியதாவது…

ஒரு நல்ல படம் மூலம் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இது எனது முதல் வெப் தொடர் அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. விலங்கு தொடர் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் விமல் பேசியதாவது….

உங்களை பல வருடங்களுக்கு முன் சந்திக்கிறேன். இந்தக் கதை முதலில் சொன்ன போது படமாக இருந்தது ஆனால் கதை சொல்ல சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் புதிதாக இருந்தது. நான் ஹீரோ ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார், ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் எல்லோரும் இணைந்து எங்கள அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம்.
எங்களை நம்பி ஜீ5 இதை முன்னெடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக விலங்கு இருக்கும் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும் நன்றி.
7-எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக  க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர  நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
விலங்கு தொடரை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய,  ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார்.
ஜீ5 ஒரிஜினல் தொடரான  “விலங்கு” பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Actor Vimal talks about his new film Vilangu

More Articles
Follows