தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சினிமா கலைஞர்களுக்கு மற்ற மாநிலங்களைப் போல இலங்கை நாட்டிலும் பெரும் வரவேற்பு உள்ளது.
அங்கே இலங்கை தமிழர்கள் தமிழ் படங்களை அதிகம் பார்ப்பது வழக்கம். எனவே தமிழக கலைஞர்கள் அங்கே சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு அரசியல் காரணங்களால் கலைஞர்கள் அங்கே செல்வதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கலை நிகழ்ச்சிகளை அங்கே கலைஞர்கள் நடத்தி வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் எதிர்ப்பை மீறி ஸ்ரீலங்காவில் தன்னுடைய இசைக் கச்சேரியை நிகழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் பாடகர் ஹரிஹரன் மற்றும் நடிகை குஷ்பூ பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நவம்பர் 21 ஆம் தேதி இலங்கை – யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆனால் இதில் நடிகை குஷ்பு கலந்துக் கொள்ள கூடாது என விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி சமீபத்தில் குஷ்பு கருத்து தெரிவித்த போது… அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது குஷ்பூ பாஜக கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார். எனவே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு கலந்து கொள்வாரா என்ன சொல்லப் போகிறார்? என்பதை காத்திருந்து பார்ப்போம்.
Khsuboo should not participate in srilanka event