பிரபுசாலமன்-அஸ்வின் கூட்டணியில் சீரியஸ் ரோலில் கோவை சரளா

பிரபுசாலமன்-அஸ்வின் கூட்டணியில் சீரியஸ் ரோலில் கோவை சரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என காதல் சொட்டும் திரைப்படங்களை இயக்கியவர் பிரபு சாலமன்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ’காடன்’.

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்கியுள்ளார்.

கும்கி 2 படத்திற்காக தாய்லாந்தில் குட்டி யானையை பிடித்த பிரபுசாலமன்

இந்த நிலையில் தன் அடுத்த படமான ’செம்பி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் காமெடி நடிகையான கோவை சரளா மிகவும் சீரியஸான ரோலில் நடித்துள்ளார்.

இவருடன்’குக் வித் கோமாளி’ அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் கதைதான் நாயகன் என்றும் தனியாக நாயகன் நாயகி என்றும் யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது.

Kovai Sarala in a serious role in the Prabhu solomon -Aswin film

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ‘நெஞ்சுக்கு நீதி’.

போனிகபூர் தயாரிப்பில் அருண் ராஜா இயக்கிய இந்த படம் நேற்று ரிலீசானது.

திமுக கட்சித் தொண்டர்கள் இலவசமாக இந்த படத்தை பார்க்க முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் ஒரு பிரபல தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்தன. நம் தளத்தில் இதன் விமர்சனத்தை படித்திருப்பீர்கள்.

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

இந்த படத்தை உதயநிதி ரசிகர்கள் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைத்துள்ளனர்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது குமரி மாவட்டத்தில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கட் அவுட்களால் நிச்சயம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பலத்த காற்றால் எந்த நேரமும் பேனர்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே வண்டிகளை ஓட்டி வருகின்றனர்.

கட் அவுட் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உயர்நீதிமன்றம், சாலையோரங்களில் கட் அவுட் வைக்கக்கூடாது என உத்தரவு போட்டது.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதாலும் உதயநிதி எம்எல்ஏ ஆக இருப்பதாலும் இதனை காவல்துறை கண்டுக்காமல் செல்கிறது.

மேலும் பல பேனர்களில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் படங்கள் உள்ளதால் பேனரை அகற்றாமல் போலீஸாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

ஆனால் பேனர் விழுந்தால் பாதிக்கப்படுவது மக்கள்தானே…

மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலம் அநீதி ஏற்படாமல் தடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்..?

Nenjukku Needhi release : Injustice done by Udayanithi stalin fans to the people ?

‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்

‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

ராஜமௌலி இயக்கி அண்மையில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார்.

நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் 40வது பிறந்த நாள்.

இதை முன்னிட்டு கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை அப்செட் ஆக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு

இயக்குநர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதற்கு NTR31 என தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிட உள்ளனர்.

ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை கொரட்டல சிவா இயக்குகிறார். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘கேஜிஎஃப்’ படத்தின் 3ஆம் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

யஷின் ‘கேஜிஎஃப் 3’ படத்தில் இணையும் ‘பாகுபலி’ பட பிரபலம்

‘KGF’ Director Prasanth Neil directs Junior NTR

வா நீ.. வா நீ.; வாணிபோஜன் காட்சிகளை வெளியிட்டது ‘மகான்’ படக்குழு

வா நீ.. வா நீ.; வாணிபோஜன் காட்சிகளை வெளியிட்டது ‘மகான்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் அவரது மகன் துருவ் முதன்முறையாக இணைந்து நடித்த படம் ‘மகான்’.

இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசைமைத்து இருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவான இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது.

கேங்ஸ்டர் ட்ரீட் .. மகான் விமர்சனம் 3.25/5

விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வாணி போஜன் நடித்திருந்தார் என செய்திகள் வெளியானது. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லை.

கொரோனா 2ஆம் அலையால் வாணி கேரக்டரை முழுமையாக படம் பிடிக்காமல் போனதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இதனால்தான் அவரது காட்சிகளை நீக்கியதாக இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

தற்போது படம் ரிலீசாகி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தில் இடம் பெறாத நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அதில் வாணி போஜன் இடம் பெற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இத்துடன் நீக்கப்பட்ட இன்னும் சில காட்சிகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனால் வாணி போஜன் ரசிகர்கள் வா நீ.. வா நீ என உற்சாகமாகியுள்ளனர்.

இதோ வீடியோ லிங்க்…

Here’s Making featurette .. https://www.youtube.com/watch?v=7QWzmm93MYo

#DaDa entry…. #Soorayaatam video song … https://www.youtube.com/watch?v=qmEh-Zpz1pw

#Mahaan – Deleted Scenes

Deleted Loneliness – https://www.youtube.com/watch?v=kUErKGyOACc

Deleted curse – https://www.youtube.com/watch?v=ijxMAt-Irl0

Deleted kin – https://www.youtube.com/watch?v=BpBBCqvdx_E

Mahaan deleted scenes released by movie crew

ஆர்.பி. பாலா இயக்கத்தில் ‘லவ்’ பண்ணும் பரத் – வாணிபோஜன்

ஆர்.பி. பாலா இயக்கத்தில் ‘லவ்’ பண்ணும் பரத் – வாணிபோஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் தான் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படம் வந்த போல இருக்கு… (அதுக்கு காரணம் பாய்ஸ் படத்தை இன்றைய ட்ரெண்ட்டுக்கு ஏற்ப எடுத்திருப்பார் ஷங்கர்). அதுக்குள்ள பாய்ஸ் பட ஹீரோக்களில் ஒருவரான பரத் 50 படங்களில் நடித்து விட்டார்.

இவர் நடித்த படங்களில் காதல் பெரும் ஹிட்டானது.

தற்போது பரத்தின் 50வது படமாக உருவாகவுள்ளது ‘லவ்’. இதில் வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

வாணி போஜன் கலக்கல் புகைப்படங்கள்

இதில் விவேக் பிரசன்னா, டேனியல் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஆர்பி பாலா இயக்குகிறார்.

இவர் பிரபல படங்களான மரைக்காயர், புலிமுருகன் உள்ளிட்ட படங்களுக்கு தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தா ஆவார். படத்தை ஆர்பி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

புலி முருகன் பாலாவை பாராட்டிய மோகன்லால்

ரான்னி ரபேல் இசையமைக்க முத்தையா ஒளிப்பதிவு செய்ய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தற்போது இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

லவ்

Bharath and Vani Bhojan joins for Love

விநாயகர் சதுர்த்திக்கு சூர்யா – கார்த்தி தரும் ‘விருமன்’ விருந்து

விநாயகர் சதுர்த்திக்கு சூர்யா – கார்த்தி தரும் ‘விருமன்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விருமன்’.

‘கொம்பன்’ பட வெற்றிக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தில் முத்தையா – கார்த்தி இணைந்துள்ளனர்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ‘விருமன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி ‘விருமன்’ வெளியாகும் என அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா.

Suriya – Karthi’s treat to his fans

More Articles
Follows