கமல்ஹாசனிடம் கற்றுக் கொள்.; அஸ்வினுக்கு ஆர்வி.உதயகுமார் அட்வைஸ்

கமல்ஹாசனிடம் கற்றுக் கொள்.; அஸ்வினுக்கு ஆர்வி.உதயகுமார் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…*

கமல் சாருக்கு என்னைவிட தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து சிங்காரவேலன் படமெடுத்தேன். இன்றும் கொண்டாடும் படமாக இருக்கிறது. அதற்கு காரணம் கமல் சார் தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார்.

அஷ்வின் அவர்களே கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கூடியவர் கோவை சரளா தான். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

Rv Udayakumar advise to actor Ashwin Kumar

வீச்சருவா வீசி வந்தோம்..; நேதாஜியை போற்றும் ‘போர்குடி’ பட பாடல் ரிலீஸானது

வீச்சருவா வீசி வந்தோம்..; நேதாஜியை போற்றும் ‘போர்குடி’ பட பாடல் ரிலீஸானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘போர்குடி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.

11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ். எஸ். நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘போர்குடி’.

இதில் ஆர். எஸ். கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை மணிகண்டன் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

பாடலாசிரியர் ஆர். தியாகு எழுதியிருக்கும் இந்த பாடலை, பாடகர் வி. எம். மகாலிங்கம் மற்றும் பாடகி லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

பாடலைப் பற்றி நாயகன் கார்த்திக் பேசுகையில்…

”ஒரு திரைப்படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும்.

ஆனால் எங்கள் படக் குழு முதன் முறையாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம்.

இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான திரைப்படப் பாடல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்.” என்றார்.

‘போர்குடி’ படத்தில் இடம்பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற நேதாஜி பாடல் துள்ளலிசையாக அமைந்திருப்பதால் இணையவாசிகளையும், இசை ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

R S Karthiik starrer Poorkudi Video of 1st Single Released.

First single #Nethaji from #Porkudi is Out Now💥

Watch the Video Song Here ⬇️

@KarthiikPK @catcharadya
@Vijay_G_Actor @Thiyagu_Raman
@Saja_actor @senthil2111986
@murukku_meesaya @trendmusicsouth @ProSrivenkatesh

ரஜினி பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தம்..!

ரஜினி பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸுடன் ரஜினி இரண்டு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், அந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், துணைத் தலைவர் பிரேம்சிவசாமி மற்றும் தயாரிப்புத் தலைவர் ஜிகேஎம் தமிழ்குமரன் ஆகியோர் இன்று ரஜினியின் இல்லத்தில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

லைகா நிறுவனம், ரஜினியின் ‘2.0’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரு படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

rajini joins lyca productions new movie

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், Viacom18 Studios மற்றும் Marflix Pictures ஆக்‌ஷன் நிரம்பிய ஃபைட்டர் படத்தை 25 ஜனவரி 2024 அன்று வெளியிட உள்ளது. இந்திய விமானப்படை விமானிகளாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஃபைட்டரில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அனில் கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படம், குடியரசு தின வார இறுதியில் ரிலீஸாகவுள்ளது.

பாலிவுட்டில் மீண்டும் இறங்கும் இயக்குனர் அட்லீ – நடிகர் யார் ?

பாலிவுட்டில் மீண்டும் இறங்கும் இயக்குனர் அட்லீ – நடிகர் யார் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அட்லீ, விஜய்யை வைத்து ‘தெறி’ , ‘மெர்சல்’ , ‘பிகில்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

அட்லீ இன்னொரு பாலிவுட் டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது.

அது பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ ‘சல்மான் கான்’. நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையே ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கூடிய விரைவில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ உள்ளார் அட்லீ.

சல்மான் கான்

Atlee joins with salman khan

நடிகர் அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்; ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விநியோக வியாபாரத்தில் முன்னணி நிறுவனம் ரெட் ஜெயன்ட்.

இதன் நிறுவனர் நடிகரும் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்‌ஸ் பெற்றுள்ளது.

‘வலிமை’ பட தோல்விக்கு பிறகு ‘துணிவு’ படம் வருவதால் அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

thunivu

More Articles
Follows