தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் நெருப்புக்கு நடுவே இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் படக்குழு கேமராவுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது
மேலும், ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
suriya’s kanguva movie shooting spot picture released by the team