தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளி என்றால் சினிமா இல்லாமல் சுவாரஸ்யம் இருக்காது.
எனவே, வழக்கம்போல இவ்வருட தீபாவளியையும் சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கார்த்தி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’
தீபாவளி (அக்டோபர் 25) தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.
கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதே நாளில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள ‘கொடி’யும் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளியன்று தனுஷின் ‘ஆடுகளம்’ மற்றும் கார்த்தியின் ‘சிறுத்தை’ ஆகிய படங்கள் மோதி இரண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடமும் இரண்டும் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.








