தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இப்படம் 2017 காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இதில் நாயகியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
‘சிறுத்தை’ படத்திற்கு பின் இதிலும் காக்கி சட்டை அணியவிருக்கிறார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யா ஒளிப்பதிவு செய்ய, காஷ்மோரா படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
ஜனவரி முதல் வாரம் இதன் சூட்டிங் தொடங்குகிறது.
Karthi Vinoth next movie titled Theeran Adhigaram Ondru