தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
25 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.
லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.
இதில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு நடித்திருந்தனர்.
ஆனால் சூட்டிங் முடிவதற்குள் அவர்கள் மரணித்து விட்டதால் அவர்களுடைய காட்சிகளை நீக்காமல் அதை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் செய்து இணைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் ‘இந்தியன் 2’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக காலம் தேவைப்படுவதால் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் சங்கர்.
இந்தப் படத்தை அடுத்த ஆண்டு 2024 ஜனவரியில் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ.210 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உண்மையானால் ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக ‘இந்தியன் 2’ மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian2 movie OTT rights and Price updates