உளவுத்துறை அதிகாரியாக உலகநாயகன்… சபாஷ் கமல் காரு..!

உளவுத்துறை அதிகாரியாக உலகநாயகன்… சபாஷ் கமல் காரு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan's Sabaash Naidu Latest Updatesலைகா நிறுவனத்துடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் கமல் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.

இதனால், அமெரிக்காவின் உளவுத்துறை அலுவலகத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இதற்கான விசேஷ அனுமதியையும் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதன் முழுப்படத்தையும் கமலே இயக்கவிருக்கிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், கமல் இந்த இயக்குனர் முடிவை எடுத்தாராம்.

கமல் காரு.. சபாஷ் காருதான்…

சார்லி ரீமேக்கில் விஜய்யுடன் இணையும் மாதவன்..!

சார்லி ரீமேக்கில் விஜய்யுடன் இணையும் மாதவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay to helm Charlie's Tamil Remake with Madhavanமார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த மலையாள படம் ‘சார்லி’.

இவருடன் பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

ஃபைண்டிங் சினிமா என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த இப்படத்திற்கு தமிழ் ரீமேக்குக்கு கடும் போட்டி நிலவியது.

தற்போதுதான் அதற்கான நேரம் கைகூடியுள்ளது போலும்.

துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்க, இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குகிறாராம்.

நவம்பர் 15ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.

பஞ்ச பூதங்களுடன் கனெக்ஷன் ஆன கபாலி பாடல்கள்…!

பஞ்ச பூதங்களுடன் கனெக்ஷன் ஆன கபாலி பாடல்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Songs Based on Five Elements of Nature?இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பாடல்கள் இணையத்தில் வெளியாகி ‘நெருப்பாக’ பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாடல்கள் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் தங்கள் நடிகர்தான் என கூறிவரும் சில ரசிகர்களுக்கு

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துருக்கேன்னு சொல்லு என்று ரஜினி ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் இப்படத்தின் பாடல்களை பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்.

பாடல்களும் அதன் ஒப்பீடும்…

  • உலகம் ஒருவனுக்கா – நிலம்
  • மாய நதி –நீர்
  • வீரா துறந்தாரா – காற்று
  • வானம் பார்த்தேன் – வானம்
  • நெருப்பு டா – தீ என குறிப்பிட்டுள்ளார்.
கபாலி பாடல் குறித்து விஜய், சிவகார்த்திகேயன் ரியாக்ஷன்..!

கபாலி பாடல் குறித்து விஜய், சிவகார்த்திகேயன் ரியாக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Sivakarthikeyan Talks About Kabali Audioகபாலி பாடல்கள் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்ட முதலே ஜீன் 12ஆம் தேதி கபாலி தினமாகவே பார்க்கப்பட்டது.

பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, எங்கு திரும்பினாலும் அப்பாடல்கள் பற்றிய பேச்சே காணப்பட்டது.

நெருப்புடா தொடங்கி கபாலிடா வரை இந்த குரல்களுக்கு பஞ்சமில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

இவர்களைப் போல், பெரிய நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தெரிவித்துள்ளதாவது… செம எனர்ஜியான பாடல்கள். மகிழ்ச்சி என கூறினாராம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது…

‘கபாலி பாடல்களை கேட்டேன். கலக்கிட்டீங்க சந்தோஷ்… வாழ்த்துக்கள் ரஞ்சித்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தன் நண்பரான அருண்ராஜா காமராஜக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில்…

“திரும்ப திரும்ப கேட்கும் பாடல் நெருப்புடா… உன் குரல் மற்றும் பாடல் வரிகள் வேற லெவல்.

உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீ மிகப்பெரிய உயரம் தொட காத்திருக்கிறேன்“ என பதிவிட்டுள்ளார்.

‘சபாஷ் நாயுடு’வுக்காக மூன்று அவதாரம் எடுத்த கமல்..!

‘சபாஷ் நாயுடு’வுக்காக மூன்று அவதாரம் எடுத்த கமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan Has Taken Over the direction for Sabaash Naiduராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் “சபாஷ் நாயுடு”.

இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கமல்.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திடீரென இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

எனவே, படத்தின் முழு இயக்கத்தையும் தானே கவனிக்கவிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளார் கமல்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

“ராஜீவ்வுக்கு லைம் என்ற நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதால் நான் படத்தை இயக்கிவருகிறேன்.

அவரை பார்த்துக் கொள்ள 24 மணி நேரமும் படக்குழுவிலிருந்து ஒருவர் சென்று மருத்துவமனையில் கண்காணித்து வருகின்றார்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் நடிகர், தயாரிப்பாளர் என பணியாற்றி வந்த கமல், தற்போது மூன்றாவதாக இயக்குனர் அவதாரத்தையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு சவால் விடும் ‘ரெமோ’.!

வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு சவால் விடும் ‘ரெமோ’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

35 Crores Budget for Sivakarthikeyan's Remoசினிமா துறையில், பெரிய நடிகர்களின் சம்பளத்தை பொறுத்தே படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் வளர்ந்து வரும் கலைஞர்களின் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அப்படத்தின் பட்ஜெட்டாக ஒதுக்கப்படும்.

அதற்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்வதே படத்தின் இயக்குனரின் வேலையாக இருக்கும்.

எனவே வளர்ந்து வரும் ஹீரோவுக்கு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக பேசப்படும்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் படத்திற்கு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இவர் நடித்து வரும் ரெமோ படம் ரூ. 35 கோடியில் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இசை அனிருத்.

More Articles
Follows