தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் கபாலி பாடல்கள் நெருப்புடா என்று தீ வேகத்தில் இணையங்களில் பரவி கொண்டிருக்கிறது.
இப்படம் ரிலீஸ் தேதியை கபாலி நெருங்கி கொண்டிருப்பதால், படத்தின் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக கசிந்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த மேலும் தகவல்களை தயாரிப்பாளர் தாணுவே சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது….
“தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒரு கேரக்டரை பற்றியதுதான் இந்த கபாலி. எனவேதான் பெரும்பாலான காட்சிகளை மலேசியாவில் படமாக்கினோம்.
இது ஒரு டான் கதை தான். இதில் ‘தளபதி‘ சாயலும் இருக்கும். ‘நாயகன்‘ சாயலும் இருக்கும். இந்த இரண்டின் கலவைதான் ‘கபாலி‘.
டீசரில் ஒரு இளமையான ரஜினி தோன்றியிருப்பார். அன்றைய தினம் ரஜினிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது.
ஆனால் அதனைப் பொருப்படுத்தாமல் ரஜினிக்கே உரித்தான அதே வேகத்துடன் நடித்து கொடுத்தார்.
தாய்லாந்து நாட்டில் கிளப்புகள் நிறைந்த தெரு ஒன்று உள்ளது. ரஜினி சார் அங்கே சென்றால் படப்பிடிப்பே நடத்த முடியாது என்பதால் சென்னையில் அதே போன்று செட்போட்டு படமாக்கினோம்.
எனவே அக்காட்சிக்காக வெளிநாட்டு பெண்கள் சுமார் 500 பேரை நடிக்க வைத்தோம். அவர்களுடன் சமமாக ரஜினி சார் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கபாலி ரிலீஸ் ஆகி 2 மாதங்களுக்கு பிறகு சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளோம்.
ரஜினிக்கும் எனக்கும் 35 வருட கால நட்பு உள்ளது. அந்த நட்புக்கு அடையாளமாக ‘வி கிரியேஷன்ஸ்‘ நிறுவனத்துக்கு ஒரு மகுடமாக ‘கபாலி‘ படம் நிச்சயம் இருக்கும் என்று ரஜினி சார் சொன்னார்”
இவ்வாறு தாணு தெரிவித்துள்ளார்.