தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ்.
இவர் இராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் எம்பியாக இருந்தவர்.
பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார்.
46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி 41 வயதாகிறது.
ஜோதீஸ்வரி காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய்க்கு தங்க, வெள்ளி, வைர நகைகளை வாங்கி இருக்கிறார்.
அதற்கு 20 லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். காசோலையில் பணம் இல்லாததால் திருப்பி வந்துள்ளது.
இதனால் திருச்செல்வம் நீதி மன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிப்பதாக நீதிபதி உத்தரவு விட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பட்டதால் ஜோதீஸ்வரி தரப்பில் பெயில் ஜாமின் போடப்பட்டது. அதை நீதிபதி ஒத்திவைப்பததாக அறிவிக்கப்பட்டார்.
இதனால், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.
JK Ritheesh’s wife Jotheeswari was jailed