அஜித்-விஜய்யிடம் காஜல் கண்டுபிடித்த ஒற்றுமை

அஜித்-விஜய்யிடம் காஜல் கண்டுபிடித்த ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vijay Kajal Agarwalவிஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால்.

தற்போது அஜித்துடன் சிவா இயக்குனம் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

இந்நிலையில் இரண்டு ஹீரோக்களை பற்றியும் காஜல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போது…

“இருவருமே தலைக்கனம் இல்லாத பெரிய நடிகர்கள். நட்பை மதிக்க தெரிந்தவர்கள்.

இருவரும் ஒருவர்தான். அவர்களிடம் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.” என்றார்.

‘நீரு… நீரு…’ – விவசாயிகளுக்காக சூப்பர் ஸ்டாரின் விருந்து

‘நீரு… நீரு…’ – விவசாயிகளுக்காக சூப்பர் ஸ்டாரின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeeviஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை உண்டாக்கியது.

இப்படம் நீ…..ண்ட சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

லைக்கா மற்றும் ராம் சரண் இணைந்து தயாரிக்க, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகியுள்ளது.

விவி விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், லட்சுமி ராய் உள்ளிட்டோர் நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நீரு… நீரு என்ற பாடலை இன்று 6 மணிக்கு விவசாயிகளுக்காக அர்ப்பணித்து வெளியிடுகின்றனர்.

chiranjeevi

‘பைரவா’ கலெக்சன் டார்கெட்… விஜய் சாதிப்பாரா?

‘பைரவா’ கலெக்சன் டார்கெட்… விஜய் சாதிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa movie imagesஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாம்.

கிட்டதட்ட 400 அரங்குகளில் இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினால் மட்டுமே, இப்படத்திற்கு நிறைய லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

பைரவா படத்துடன் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் இத்தனை தியேட்டர்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

வசூலில் பைரவா சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரோக்கியமாக வாழ ஜாக்குவார் தங்கம் தரும் ஐடியாஸ்…

ஆரோக்கியமாக வாழ ஜாக்குவார் தங்கம் தரும் ஐடியாஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jaguar thangamகுறும்பட இயக்குநரும் எழுத்தாளருமான ஜி.எஸ்.குமாரதேவி எழுதிய ‘காற்றடைத்த பையடா’ நூல் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.

ஜாக்குவார் தங்கம் நூலை வெளியிட்டார். வனிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இளைஞர்கள் பலரும் பெற்றுக் கொண்டனர். நூலை வெளியிட்டு அவர் பேசும் போது..

“நான் இந்த நாவலை வாசித்தேன் .அதில் கெட்டவை எதுவும் இல்லை . நேர்மை. புதுமை, உண்மை. இருக்கிறது.

சகோதரி குமாரதேவி உடல் பலத்தை விட மனபலம் உள்ளவர். மனபலம் இருந்தால் சாதிக்க முடியும்.

மனம் பாதை மாறினால் கேடுகள் வரும்.

இன்று நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் பேய் மனமே காரணம் .இதைப் போக்க நாம் யோகாசனம் செய்ய வேண்டும்.

ஆழ்மனம் விழித்தால் எல்லாம் முடியும்.

என் 5 வயதில் அம்மா காலமானார். 6 வயதில் அப்பா காலமானார்.

அப்படிப்பட்ட சூழலில் இருந்த நான் படிக்க முடியவில்லை. ஆனால் சிறு வயதிலேயே யோகா, சிலம்பம். ஜூடோ, வர்மம் என்று ஒன்று விடாமல் கற்றுக் கொண்டேன்.

நான் இதுவரை 1007 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த 64 வயதில் ஆரோக்கியமாக இளமையாக இருக்கிறேன்.

காரணம் இத்தனை ஆண்டுகளாக மது, மாது, புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.

நான் இதுவரை 21 ஆயிரம் பேருக்கு யோகா சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். விஜயகாந்த், சரத்குமார், விஜயசாந்தி, ரம்பா, சினேகா வரை பலருக்கும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன்.

நான் இப்போது மீண்டும் சொல்கிறேன் ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எதுவும் நம்மால் முடியும்.

சாப்பிடும் போது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.

பொறுமையாக மென்று சாப்பிடுங்கள் அப்போதுதான் உமிழ்நீரால் உண்டது செரிக்கும். ஷவரில் குளிக்காதீர்கள்.

கால் முதல் தலைக்கு படிப்படியாக தண்ணீரை ஊற்றிக் குளியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களைப் பாராட்டுங்கள். இதையே தொடர்ந்து செய்தால் ஆரோக்கி்யம் பெருகும்.” இவ்வாறு ஜாக்குவார் தங்கம் பேசினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெரியண்ணன், தினமலர் பத்திரிகையின் மூத்த நிருபர் சக்கரபாணி, திரைப்பட இயக்குநர்கள் ‘அய்யனார்’ ராஜமித்ரன் , ஜி.கே.லோகநாதன், திருக்குறள் பேரவைத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நங்கைநல்லூர் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் வி.சக்திவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நிறைவாக எழுத்தாளர் ஜி.எஸ்.குமாரதேவி ஏற்புரை வழங்கினார்.

பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

பொங்கலுக்கு இரண்டு விருந்து தரும் ஜி.வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakashஅதர்வா நடிப்பில் வெளியான “ஈட்டி” படத்தை இயக்கியவர் ரவிஅரசு.

இப்படத்தை தொடர்ந்து அவர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தை விஜய்சேதுபதியின் நண்பரும் றெக்க படத் தயாரிப்பாளருமான பி.கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபோட்டோ ஷுட் ஜனவரி 1ஆம் தேதி நுங்கம்பாக்கம் செட் ஃபேரில் நடந்தது.

இதன் ஃபர்ஸ்ட் லுக்கை பொங்கல் தினத்தில் வெளியிடயுள்ளனர்.

ஜிவி. பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள புரூஸ் லீ படம், பொங்கல் திருநாளில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

சூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Sivakarthikeyanநெல்லை மாவட்டத்தில் பிரபலமான தியேட்டர் ராம் சினிமாஸ்.

கடந்தாண்டில் இந்த தியேட்டர்களில் வெளியான படங்கள் குறித்து ஓர் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதில்…

கடந்தாண்டு நல்ல படங்களை ரிலீஸ் செய்து வசூல் செய்தோம்.

அதே நேரத்தில் சூர்யாவின் 24, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ, மாதவனின் இறுதிச்சுற்று ஆகிய நல்ல படங்களை மிஸ் செய்துவிட்டோம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

Ram Muthuram Cinemas ‏@RamCinemas
2016 went really good for us We released many good movies and missed some good movies too #24 #RM #Remo #IrudhiSuttru and a few

More Articles
Follows